பிறந்தநாளில் புதிய அவதாரம் எடுத்த சாக்ஷி அகர்வால்… ‘OKUU’ பிராண்டை அறிமுகப்படுத்தினார்!

84

நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் உருவாக்கி வந்துள்ள பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் நிறுவனமான ‘OKUU’-வை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளார்.

‘காலா’, ‘விஸ்வாசம்’, ‘அரண்மனை 3’ உள்ளிட்ட திரைப்படங்களிலும், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலமும் ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ள சாக்ஷி அகர்வால், தற்போது தொழில்முனைவோராக புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.

இந்த பிராண்டை உருவாக்குவதற்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆராய்ச்சி, தயாரிப்பு மேம்பாடு மற்றும் தரத்தை உறுதிப்படுத்தும் பணிகளில் முழுமையாக ஈடுபட்ட அவர், இறுதி 11 மாதங்களில் மட்டும் தயாரிப்பு கலவையில் 551 முறை மாற்றங்களை மேற்கொண்டு, தனது எதிர்பார்ப்புக்கு ஏற்ப உயர்தர தயாரிப்பை உருவாக்கியுள்ளார்.

பொதுவாக பிரபலங்கள் ஏற்கனவே சந்தையில் இருக்கும் தயாரிப்புகளுக்கு விளம்பரத் தூதர்களாக செயல்படுவது வழக்கம். ஆனால், சாக்ஷி அகர்வால் அதற்கு மாறாக, தனது பெயரை ஒரு தயாரிப்புடன் இணைப்பதை விட, தரமான ஊட்டச்சத்து தயாரிப்பை தானே உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார். தயாரிப்பின் தேவையை கண்டறிவது முதல் அதன் தரம், கலவை மற்றும் நிறுவனத்தின் நோக்கம் வரை ஒவ்வொரு கட்டத்திலும் அவர் நேரடியாக பங்கேற்றுள்ளார்.

திரைப்பட வாழ்க்கையுடன் உடல்தகுதியை பராமரிக்க வேண்டிய தனது அனுபவங்களே, இந்தியாவில் உலகத் தரத்திலான ஊட்டச்சத்து தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு காரணமாக இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

‘OKUU’ என்பது தாவர அடிப்படையிலான (Plant-Based) பிரீமியம் புரோட்டீன் பார் ஆகும். இதில் 35 கிராம் புரோட்டீன், 14 கிராம் நார்ச்சத்து மற்றும் 6 கிராம் கொலாஜன் இடம்பெற்றுள்ளதுடன், சர்க்கரை, தேவையற்ற ரசாயனங்கள் மற்றும் செயற்கை சேர்மங்கள் இல்லாமல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சாக்ஷி அகர்வால் கூறுகையில், “கடந்த ஐந்து ஆண்டுகளாக நடிகை வாழ்க்கையுடன் இணைந்து ‘OKUU’ நிறுவனத்தை உருவாக்கும் பணியிலும் முழு அர்ப்பணிப்புடன் ஈடுபட்டு வந்தேன். இது ஒரு பிரபலத்தின் பெயரில் உருவாக்கப்பட்ட பிராண்ட் அல்ல. இந்திய மக்களுக்கு தரமான மற்றும் சிறந்த ஊட்டச்சத்து தயாரிப்புகளை வழங்க வேண்டும் என்ற எண்ணத்தில் உருவான முயற்சி. பல ஆண்டுகளாக என் மனதில் இருந்த கனவை இன்று அனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்,” என்றார்.

நடிகையாக மட்டுமல்லாமல் தொழில்முனைவோராகவும் தனது பயணத்தை தொடங்கியுள்ள சாக்ஷி அகர்வால், ‘OKUU’மூலம் இந்தியாவின் பெர்ஃபார்மன்ஸ் நியூட்ரிஷன் துறையில் புதிய அத்தியாயத்தை தொடங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.