இயக்குநராகவும் கதாநாயகனாகவும் அறிமுகமாகும் D.I. கபில்… காதலுக்கு புதிய பரிமாணம் தரும் ‘LOVE PROJECT’ விரைவில் திரைக்கு!

19

இளம் இயக்குநரும் நடிகருமான D.I. கபில், இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள புதிய காதல் திரைப்படம் ‘LOVE PROJECT’ விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இன்றைய இளைஞர்களின் காதல், உறவுகள் மற்றும் உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், காதலை புதிய பார்வையில் சொல்லும் முயற்சியாக உருவாகியுள்ளது.

நடிகர் பிரதீப் ரங்கநாதன் உடன் குறும்படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட D.I. கபில், இந்தப் படத்தின் மூலம் முழுநீள திரைப்பட இயக்குநராகவும், கதாநாயகனாகவும் தமிழ் திரையுலகில் அறிமுகமாகிறார்.

இப்படத்தில் சங்கீதா கதாநாயகியாக நடித்துள்ளதுடன், விஜய் டிவி சக்திவேல், குண்டு சத்யா, வினோத், விஜய் சேனாதிபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சாதிக் கபீர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சிமியோன் டெல்பர் இசையமைத்துள்ளார். பாடல்களையும் அவரே எழுதியுள்ளார். அபினேஷ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ள நிலையில், தேவா நடன அமைப்பை கவனித்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளவர் D.I. கபில்.

படம் குறித்து இயக்குநர் D.I. கபில் கூறுகையில், “‘LOVE PROJECT’ என்பது காதல் கதையாக மட்டுமல்லாமல், இன்றைய தலைமுறையின் உறவுகள், உணர்வுகள் மற்றும் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் திரைப்படமாக உருவாகியுள்ளது. புதிய திரைக்கதை, வித்தியாசமான காட்சியமைப்பு மற்றும் தரமான தொழில்நுட்பத்துடன் இப்படத்தை உருவாக்கியுள்ளோம். காதலை ஒரு புதிய பார்வையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம். மக்கள் மனதில் நீண்ட காலம் நிற்கும் படைப்பாக ‘LOVE PROJECT’ இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது”என்றார்.

தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் ஃபர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் மற்றும் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

“காதலுக்கு ஒரு புதிய மொழி” என்ற அடைமொழியுடன் உருவாகியுள்ள ‘LOVE PROJECT’, புதிய தலைமுறையின் காதலை புதுமையான அணுகுமுறையில் சொல்லவிருக்கும் திரைப்படமாக விரைவில் ரசிகர்களை சந்திக்க உள்ளது.