‘செகண்ட் லவ்’ ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்… இனி அனைத்து ஏழு எபிசோடுகளும் ஒரே நேரத்தில்!

21

ஜியோஹாட்ஸ்டார் தமிழின் ரியாலிட்டி காதல் நிகழ்ச்சியான ‘செகண்ட் லவ்’, முதல் வார வெளியீட்டுக்கு ரசிகர்களிடமிருந்து கிடைத்த உற்சாகமான வரவேற்பைத் தொடர்ந்து, பார்வையாளர்களின் வசதிக்காக புதிய வெளியீட்டு முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி ஒவ்வொரு திங்கட்கிழமையும் அந்த வாரத்திற்கான அனைத்து ஏழு எபிசோடுகளும் ஒரே நேரத்தில் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளன.

காதல் தோல்விக்குப் பிறகு மீண்டும் காதலைத் தேடும் மனிதர்களின் உணர்வுபூர்வமான பயணத்தை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள ‘செகண்ட் லவ்’, முதல் வாரத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இயல்பான உரையாடல்கள், மனதைத் தொடும் தருணங்கள், எதிர்பாராத உறவுகள் மற்றும் உணர்ச்சிகரமான சம்பவங்கள் ஆகியவை இந்த நிகழ்ச்சிக்கு தனித்துவமான வரவேற்பை பெற்றுத் தந்துள்ளன.

ரசிகர்களின் இந்த நேர்மறையான வரவேற்பைத் தொடர்ந்து, தினமும் ஒரு எபிசோடிற்காக காத்திருக்க வேண்டிய நிலையை மாற்றும் வகையில் புதிய வெளியீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பார்வையாளர்கள் தங்களுக்கு விருப்பமான நேரத்தில் முழு வார எபிசோடுகளையும் தொடர்ச்சியாக பார்த்து ரசிக்க முடியும்.

ஒவ்வொரு வாரமும் வலுப்பெறும் உறவுகள், ஆழமடையும் உணர்வுகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன், ‘செகண்ட் லவ்’ நிகழ்ச்சி ரசிகர்களுக்கு இன்னும் சுவாரஸ்யமான காதல் அனுபவத்தை வழங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

பனிஜே ஆசியா புரொடக்ஷன் ஹவுஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ரியாலிட்டி காதல் நிகழ்ச்சி, ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் நிகழ்ச்சி தொடர்பான புதிய அப்டேட்கள் ஜியோஹாட்ஸ்டார் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் தமிழ் சமூக வலைதளப் பக்கங்களில் தொடர்ந்து வெளியிடப்படவுள்ளன.