படப்பிடிப்பை நிறைவு செய்த சாய் துர்கா தேஜின் ‘சம்பராலா ஏடி கட்டு’… 2027 ஜனவரி 12 சங்கராந்தி வெளியீடு!

8

‘மெகா சுப்ரீம் ஹீரோ’ சாய் துர்கா தேஜ் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படமான ‘சம்பராலா ஏடி கட்டு – SYG’ படத்தின் முழுமையான படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. அறிமுக இயக்குநர் ரோஹித் கே.பி.இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை ப்ரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கே. நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் இணைந்து தயாரித்து வருகின்றனர். படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்படம் 2027 ஜனவரி 12ஆம் தேதி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அறிவிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர், ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. அதில் சாய் துர்கா தேஜ் இதுவரை பார்த்திராத வகையில் மிகவும் தீவிரமான மற்றும் கரடு முரடான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். உடல் முழுவதும் ரத்தம் மற்றும் காயங்களுடன், கையில் ஆயுதத்தை ஏந்தியபடி ஆக்ரோஷமான முகபாவனையுடன் அவர் தீப்பிழம்புகள் சூழ்ந்த பின்னணியில் நடந்து வருவது போல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. எரியும் கட்டிடங்கள், புகை மற்றும் பதற்றமான சூழல் ஆகியவை படத்தின் அதிரடி ஆக்‌ஷன் உலகத்தை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளன.

ஏற்கனவே வெளியான ‘அசுர ஆகமனம் – Asura Aagamana’ முன்னோட்டக் காட்சி மற்றும் பிற விளம்பரப் போஸ்டர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், தற்போது படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்திருப்பது படக்குழுவினருக்கு முக்கியமான மைல்கல்லாக அமைந்துள்ளது. இதையடுத்து படத்தின் தொழில்நுட்பம் மற்றும் காட்சி அமைப்புகளை மேலும் சிறப்பாக்கும் வகையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி வரும் ‘சம்பராலா ஏடி கட்டு’, பல்வேறு இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்டமான அரங்குகள் மற்றும் பெரிய அளவிலான ஆக்‌ஷன் காட்சிகள் படத்தின் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன. நீண்ட காலமாக நடைபெற்று வந்த படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், சங்கராந்தி வெளியீட்டை இலக்காகக் கொண்டு படக்குழு அடுத்தகட்ட பணிகளை வேகப்படுத்தியுள்ளது.

இப்படத்தில் சாய் துர்கா தேஜ் சக்திவாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத வகையில் மாறுபட்ட தோற்றத்திலும் தீவிரமான கதாபாத்திரத்திலும் அவர் காட்சியளிக்க இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. வலுவான உணர்வுகள், பிரம்மாண்டமான காட்சிகள் மற்றும் விறுவிறுப்பான ஆக்‌ஷன் காட்சிகளை ஒருங்கிணைத்து ரோஹித் கே.பி. இப்படத்தை உருவாக்கி வருகிறார்.

பான் இந்தியா ரசிகர்களை கவரும் வகையில் இப்படத்தில் பாலிவுட்டின் முன்னணி நடிகர் ஒருவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருடன் ஐஸ்வர்யா லட்சுமி, ஜகபதி பாபு, சாய் குமார், ஸ்ரீகாந்த் மற்றும் அனன்யா நாகள்ள உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘சம்பராலா ஏடி கட்டு’ திரைப்படத்தின் தொழில்நுட்பக் குழுவிலும் பல முன்னணி கலைஞர்கள் இணைந்துள்ளனர். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவை மேற்கொள்ள, பி. அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். நவின் விஜய் கிருஷ்ணாபடத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். காந்தி நதிக்குடிகர் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார். படத்தின் பிரம்மாண்டமான சண்டைக் காட்சிகளை பீட்டர் ஹெய்ன், ராம் லக்ஷ்மன், கேத்தன் மற்றும் ப்ருத்விஆகியோர் இணைந்து வடிவமைத்துள்ளனர்.

‘சம்பராலா ஏடி கட்டு – SYG’ திரைப்படம் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் விறுவிறுப்பாக பயணித்து வருகிறது. சாய் துர்கா தேஜின் மாறுபட்ட தோற்றம், பிரம்மாண்டமான ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் பான் இந்தியா அளவிலான நட்சத்திரப் பட்டாளம் ஆகியவற்றுடன் உருவாகி வரும் இப்படம், 2027 ஜனவரி 12ஆம் தேதி சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது.