‘லோகா’ முதல் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ வரை… மலையாள சினிமா விநியோகத்தில் அசத்தும் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ்!

8

கேரள எல்லைகளைத் தாண்டி மலையாளத் திரைப்படங்களை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் கொண்டு சேர்க்கும் நோக்கில் செயல்பட்டு வரும் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் (Future Runup Films), ‘லோகா: சேப்டர் 1 – சந்திரா’, ‘களம்காவல்’ மற்றும் தற்போது வெளியாகவுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஆகிய படங்களின் மூலம் விநியோகத் துறையில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது.

குறுகிய காலத்திலேயே விநியோகத் துறையில் குறிப்பிடத்தக்க நிறுவனமாக உருவெடுத்துள்ள ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ், கேரளத்திற்கு வெளியே மலையாள சினிமாவுக்கான புதிய சந்தைகளை உருவாக்குவதுடன், தரமான மலையாளத் திரைப்படங்களை நாடு முழுவதும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியிலும் கவனம் செலுத்தி வருகிறது.

தயாரிப்பாளரும் நடிகருமான அருண் நாராயணன், நடிகரும் இயக்குநருமான திலீஷ் போத்தன் மற்றும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அனூப் குமார் ஆகியோரால் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் மலையாளப் படங்களை விநியோகம் செய்வதில் கவனம் செலுத்திய நிறுவனம், டொவினோ தாமஸ் நடித்த ‘நரிவெட்டா’ திரைப்படத்தின் மூலம் தனது பயணத்தைத் தொடங்கியது.

இதனைத் தொடர்ந்து ஷேன் நிகம் நடித்த ‘பல்டி’ திரைப்படத்தை தமிழ்நாட்டில் வெளியிட்டு தனது விநியோகப் பணியை விரிவுபடுத்தியது. மலையாளத் திரைப்படங்களுக்கு தமிழ்நாட்டில் கிடைத்து வரும் வரவேற்பை அடிப்படையாகக் கொண்டு, கேரளத்திற்கு வெளியேயும் மலையாள சினிமாவுக்கான சந்தையை விரிவுபடுத்தும் முயற்சியில் நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

கடந்த ஓணம் பண்டிகையையொட்டி, துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான ‘லோகா: சேப்டர் 1 – சந்திரா’திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் விநியோகம் செய்தது. இதனைத் தொடர்ந்து ஜிதின் K. ஜோஸ் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த ‘களம்காவல்’ திரைப்படத்தையும் தமிழ்நாட்டில் வெளியிட்டது.

‘லோகா’ மற்றும் ‘களம்காவல்’ ஆகிய படங்களுக்கு கிடைத்த வரவேற்பு, தமிழ்நாட்டில் மலையாளப் படங்களுக்கான விநியோகச் சந்தையில் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸின் இருப்பை மேலும் வலுப்படுத்தியது.

இந்நிலையில், இந்த ஓணம் பண்டிகையை முன்னிட்டு நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு நடிப்பில் உருவாகியுள்ள ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தின் விநியோக உரிமையையும் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கிரிஷ் A.D.இயக்கியுள்ள இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு பதிப்புகள் வரும் செப்டம்பர் 4ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றன.

‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படத்தை தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் விநியோகம் செய்கிறது. இதன் மூலம், கேரளத்திற்கு வெளியே மலையாளத் திரைப்படங்களின் விநியோகத்தில் நிறுவனம் தனது செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்தியுள்ளது.

‘லோகா’, ‘களம்காவல்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படத்தையும் விநியோகம் செய்வதன் மூலம், மலையாள சினிமாவை கேரள எல்லைகளுக்கு அப்பால் கொண்டு செல்வதில் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் ஹாட்ரிக் சாதனையை எட்டியுள்ளது.

மலையாள சினிமா தற்போது கேரளத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் ரசிகர்களை ஈர்த்து வரும் நிலையில், இதுபோன்ற புதிய விநியோக முயற்சிகள் அந்தப் படங்களின் சந்தையை மேலும் விரிவுபடுத்தி வருகின்றன. அந்த வகையில், தரமான மலையாளப் படங்களை தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வெளியிடுவதன் மூலம், தேசிய அளவிலான விநியோகத் துறையில் வளர்ந்து வரும் முக்கிய நிறுவனமாக ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் தனது இடத்தை வலுப்படுத்தி வருகிறது.