தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை மஞ்சிமா மோகன், தற்போது தனது புதிய லுக்கால் கவனம் ஈர்த்துள்ளார்.
‘ஒரு வடக்கன் செல்பி’, ‘அச்சம் என்பது மடமையடா’, ‘தேவராட்டம்’, ‘களத்தில் சந்திப்போம்’, ‘FIR’ உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த மஞ்சிமா மோகன், சமீபத்தில் வெளியான ‘சுழல் 2’ வெப்சீரிஸிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
திரையுலகில் அடுத்தடுத்த படங்களில் புதிய பரிமாணத்தில் தோன்றுவதற்காக தன்னை மாறுபட்ட தோற்றத்திற்கு மாற்றியுள்ள மஞ்சிமா மோகன், தனது உடல் எடையை குறைத்து ஃபிட்டான தோற்றத்திற்கு மாறியுள்ளார்.
இந்த புதிய மாற்றத்துடன் அவர் நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன. ஸ்டைலிஷான தோற்றம் மற்றும் மாஸான கெட்டப்பில் மஞ்சிமா மோகன் தோன்றியுள்ள இந்தப் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது.
நடிப்பில் மட்டுமின்றி, தனது தோற்றத்திலும் புதிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள மஞ்சிமா மோகனின் இந்த மேக்ஓவர், அவர் நடிக்கவிருக்கும் அடுத்தடுத்த படங்கள் குறித்த எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
திரையுலகில் மீண்டும் வலுவான என்ட்ரி கொடுக்க தயாராகி வரும் மஞ்சிமா மோகனின் புதிய லுக், தற்போது சினிமா ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.










