சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் நிறுவனர் சக்திவேலன் பிறந்தநாள் விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த சிறப்பு விழாவில் தமிழ் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு சக்திவேலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
விழாவில் நடிகர்கள் சூர்யா, கார்த்தி, விக்ரம் பிரபு, கவுதம் கார்த்திக், பார்த்திபன், சுந்தர்.சி, மாதம்பட்டி ரங்கராஜ், சாந்தனு, குணாநிதி, ஏகன், சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இயக்குநர்கள் பாண்டியராஜ், ஆதிக் ரவிச்சந்திரன், வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்பராஜ், ராம், உறியடி விஜயகுமார், தியாகராஜன் குமாரராஜா உள்ளிட்டோரும் விழாவில் கலந்துகொண்டு சக்திவேலனுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
மேலும் நடிகைகள் சாக்க்ஷி அகர்வால், அதுல்யா ரவி ஆகியோரும் பிறந்தநாள் விழாவில் பங்கேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
தயாரிப்பாளர்கள் ஏ.எம்.ரத்னம், ஞானவேல் ராஜா, ராஜசேகர்பாண்டியன், கண்ணன் ரவி, அம்மா கிரியேஷன்ஸ் சிவா, தனஜெயன், அருண் விஷ்வா, அருளானந்து, அருண்குமார் உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்களும் விழாவில் கலந்துகொண்டனர்.
நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என தமிழ் திரையுலகின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி பிரபலங்கள் ஒரே இடத்தில் திரண்டு சக்திவேலனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்ததால், இந்த விழா உற்சாகமான கொண்டாட்டமாக அமைந்தது.
திரையுலகில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தொடர்ந்து திரைப்படங்களை விநியோகித்து வரும் நிலையில், அதன் நிறுவனர் சக்திவேலனின் பிறந்தநாள் விழாவில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
சக்திவேலன் பிறந்தநாள் விழாவின் புகைப்படங்கள்:





