நித்யா மேனன் நடிக்கும் புதிய படம் – லியோ விஷன், கேயுரி புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிப்பு!

5

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ உள்ளிட்ட படங்களை தயாரித்த லியோ விஷன் (Leo Vision) நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய திரைப்படம் உருவாகிறது. தற்போது ‘புரொடக்ஷன் நம்பர் 5’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை, நடிகை நித்யா மேனனின் கேயுரி புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (Keyuri Productions Pvt Ltd) நிறுவனத்துடன் இணைந்து லியோ விஷன் தயாரிக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இயக்குநர் டி.கே இயக்கும் இப்படத்தில் நடிகை நித்யா மேனன் கதையின் நாயகியாக நடிக்கிறார். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இப்படம் ஃபேண்டஸி வித் டார்க் காமெடி ஜானரில் உருவாகிறது.

இப்படத்திற்கு ஏ. சக்திவேல் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பு பணிகளை ரிச்சர்ட் கெவின் மேற்கொள்கிறார். மேலும், பிரபல இயக்குநர் விக்ரம் கே. குமார் இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றுள்ளார்.

தயாரிப்பாளர் வி.எஸ். ராஜ்குமார் தலைமையிலான லியோ விஷன் மற்றும் நித்யா மேனனின் கேயுரி புரொடக்ஷன்ஸ் இணையும் இப்படம், நித்யா மேனனின் நடிப்பில் ஒரு வித்தியாசமான முயற்சியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், லியோ விஷன் – கேயுரி புரொடக்ஷன்ஸ் – நித்யா மேனன் – இயக்குநர் டி.கே – விக்ரம் கே. குமார் என உருவாகியுள்ள இந்தக் கூட்டணி, ரசிகர்களுக்கு புதுமையான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள், படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு உள்ளிட்ட கூடுதல் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

வித்தியாசமான ஃபேண்டஸி மற்றும் டார்க் காமெடி களத்தில் நித்யா மேனன் கதையின் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.