ஃபஹத் ஃபாசிலின் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு – அக்டோபர் 2 முதல் திரையரங்குகளில்!

6

எஸ். எஸ். ராஜமவுலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble) திரைப்படம் வரும் அக்டோபர் 2, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ஃபஹத் ஃபாசில் மற்றும் சாரா பலேகர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இப்படம், கலகலப்பான ஃபேண்டஸி மற்றும் சாகச அம்சங்களை இணைத்து உருவாகியுள்ளது.

இப்படத்தில் ஃபஹத் ஃபாசில் சூரி என்ற கதாபாத்திரத்திலும், சாரா பலேகர் திவ்யா என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். தற்போது வெளியாகியுள்ள படத்தின் வெளியீட்டு தேதி போஸ்டர், ஃபேண்டஸியான பின்னணியில் முன்னணி கதாபாத்திரங்களை காட்சிப்படுத்துவதுடன், ரசிகர்களுக்காக காத்திருக்கும் மாயாஜால உலகத்தின் ஒரு பார்வையையும் வழங்கியுள்ளது.

‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படத்தை அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி இயக்கியுள்ளார். ஷோபு யார்லகட்டா மற்றும் எஸ். எஸ். கார்த்திகேயா இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு எஸ். எஸ். ராஜமவுலி வழங்குநராக இணைந்துள்ளார்.

படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கதையின் மையத்தில் இடம்பெறும் சுவாரஸ்யமான ஃபேண்டஸி அம்சங்களையும், வித்தியாசமான உலகத்தையும் டீசர் மூலம் படக்குழு அறிமுகப்படுத்தியுள்ளது. படத்தின் தனித்துவமான கதைக்களமும், அதன் பின்னணியும் திரைப்படத்தின் முக்கியமான சிறப்பம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், இசையமைப்பாளர் கால பைரவாஇசையில் உருவான ‘கேக்கு வாக்கு’ (Cake-u Walk-u) பாடலை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. கலகலப்பான இசையமைப்பில் உருவாகியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஃபேண்டஸி, சாகசம் மற்றும் நகைச்சுவை அம்சங்களை ஒன்றிணைத்து உருவாகியுள்ள ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’, ரசிகர்களுக்கு வழக்கமான திரைப்பட அனுபவத்திலிருந்து மாறுபட்ட ஒரு மாயாஜால உலகத்தை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகியுள்ள இத்திரைப்படம், வரும் அக்டோபர் 2, 2026அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.