அரேபிய மண்ணில் தமிழர்களின் வெற்றிக்கு மகுடம்! துபாயில் வெளியான ‘Top 100 Tamil Leaders in Arabia’

7

அரேபியாவில் பல்வேறு துறைகளில் சாதித்து வரும் தமிழர்களின் தொழில் வெற்றி, தலைமைத்துவம், சமூகப் பங்களிப்பு மற்றும் வாழ்க்கைப் பயணத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் வகையில் உருவாக்கப்பட்ட ‘Top 100 Tamil Leaders in Arabia – Edition 1’ சிறப்பு புத்தகம், Sikaram 2026 நிகழ்ச்சியில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது.

அரேபியாவில் தமிழர்களின் திறமை, உழைப்பு மற்றும் சாதனைகளை ஒரே பதிப்பில் பதிவு செய்யும் நோக்கில் WITமுன்னெடுத்துள்ள இந்த முயற்சியில், பல்வேறு துறைகளில் தடம் பதித்துள்ள 100 முன்னணி தமிழர்களின் வெற்றிக் கதைகள் இடம்பெற்றுள்ளன.

MLA லீமா ரோஸ் வெளியிட்டார்

லால்குடி சட்டமன்றத் தொகுதி MLA மாண்புமிகு லீமா ரோஸ் அவர்கள் ‘Top 100 Tamil Leaders in Arabia – Edition 1’ புத்தகத்தை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் WIT-ன் Merlin முன்னிலையில், Vijayan Ayyappan அவர்கள் புத்தகத்தை MLA லீமா ரோஸ் அவர்களிடம் ஒப்படைத்ததைத் தொடர்ந்து புத்தக வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.

முதல் பிரதிகளைப் பெற்ற முக்கிய பிரமுகர்கள்

புத்தகத்தின் முதல் பிரதிகளை PSM Investment Group Chairman Habibullah, TVS Group-ன் Haider, Complyance-ன் Kalaiarasan, Power Group Chairman Jahir Hussain மற்றும் Lynx International-ன் Saravan Krishnamurthyஉள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பெற்றுக்கொண்டனர்.

புத்தகத்தில் இடம்பெற்றுள்ள 100 தமிழ்த் தலைவர்களும் இந்தச் சிறப்புமிக்க முயற்சியின் முக்கிய அங்கமாக இடம்பெற்றுள்ளனர்.

100 வெற்றிக் கதைகளின் வரலாற்றுப் பதிவு

‘Top 100 Tamil Leaders in Arabia’ என்பது சாதனையாளர்களின் பெயர்களை மட்டும் தொகுத்து வெளியிடப்பட்ட புத்தகமாக இல்லாமல், அரேபியாவில் தமிழர்கள் உருவாக்கியுள்ள வெற்றியின் பயணத்தைப் பதிவு செய்யும் முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.

வெவ்வேறு துறைகள் மற்றும் பின்னணிகளில் இருந்து அரேபியாவிற்கு வந்து, கடின உழைப்பு, தன்னம்பிக்கை, தொலைநோக்குப் பார்வை மற்றும் விடாமுயற்சியின் மூலம் உயர்ந்த 100 தமிழர்களின் வாழ்க்கைப் பயணங்கள் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும் ஒரு போராட்டமும், ஒவ்வொரு சாதனைக்குப் பின்னாலும் ஒரு கனவும் இருப்பதை எடுத்துக்காட்டும் வகையில், இந்தக் கதைகள் அடுத்த தலைமுறையினருக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் தொகுக்கப்பட்டுள்ளன.

“இது எங்களுக்கு மிகப்பெரிய பெருமை” – Merlin

இந்த முயற்சி குறித்து WIT ஏற்பாட்டாளர் Merlin கூறுகையில், “‘Top 100 Tamil Leaders in Arabia’ முதல் பதிப்பை வெளியிடுவது எங்களுக்கு மிகப்பெரிய privilege மற்றும் pride. இது 100 பேரின் பெயர்களை பதிவு செய்யும் ஒரு புத்தகம் மட்டுமல்ல; அரேபியாவில் தமிழர்கள் உருவாக்கியுள்ள சாதனைகளையும், அவர்களின் வெற்றிப் பயணங்களையும் வரலாற்றில் பதிவு செய்யும் ஒரு முயற்சி.

நமது சமூகத்தில் ஏற்கனவே சாதித்தவர்களை கௌரவிப்பதோடு, அவர்களின் பயணம் இன்னும் பல இளைஞர்களின் கனவுகளுக்கு நம்பிக்கையாக அமைய வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். இன்று சாதித்தவர்கள், நாளைய தலைமுறைக்கு வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்,” என்றார்.

தமிழர்களை இணைக்கும் புதிய தளம்

சாதனையாளர்களைக் கௌரவிப்பதுடன், அரேபியாவில் உள்ள தமிழ் தொழில்முனைவோர், தலைவர்கள் மற்றும் பல்வேறு துறை வல்லுநர்களை ஒரே தளத்தில் இணைக்கும் Business & Leadership Networking Platform ஒன்றை உருவாக்கும் நோக்கத்திலும் WIT செயல்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, இளம் தொழில்முனைவோருக்கு வழிகாட்டுதல், networking, mentorship மற்றும் community collaboration உள்ளிட்ட வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்த முயற்சியை எதிர்காலத்தில் மேலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Sikaram 2026 – புதிய அத்தியாயத்தின் தொடக்கம்

Sikaram 2026 நிகழ்ச்சியில் நடைபெற்ற இந்தப் புத்தக வெளியீடு, அரேபியாவில் தமிழர்களின் சாதனைகளையும் தலைமைத்துவத்தையும் கொண்டாடும் முக்கியமான தருணமாக அமைந்தது.

“100 Leaders. 100 Journeys. One Tamil Legacy.” என்ற கருத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ‘Top 100 Tamil Leaders in Arabia – Edition 1’, அரேபியாவில் தமிழர்களின் வெற்றிக்கு ஒரு புதிய அடையாளத்தை உருவாக்கியதுடன், அடுத்த தலைமுறையினருக்கும் புதிய உத்வேகத்தை வழங்கியுள்ளது.

இது ஒரு புத்தக வெளியீடு மட்டுமல்ல; அரேபிய மண்ணில் தமிழர்கள் உருவாக்கிய வெற்றியை வரலாற்றில் பதிவு செய்யும் ஒரு முக்கியமான முயற்சி.

இது முதல் பதிப்பு மட்டுமே என்பதால், எதிர்காலத்தில் மேலும் பல தமிழ்ச் சாதனையாளர்களின் வெற்றிக் கதைகள் இந்தப் பயணத்தில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.