கோவை, Get Ready! செப்டம்பர் 6-ல் வருகிறது ‘தமிழ் ஐடல்’… ஏ.ஆர். ரஹ்மான் தேடும் அடுத்த குரல் யார்?

10

தமிழ்நாட்டின் அடுத்த தலைமுறை இசைத் திறமைகளைத் தேடும் ‘தமிழ் ஐடல்’ ஆடிஷன் பயணம், வரும் செப்டம்பர் 6-ம் தேதி கோவையை வந்தடைகிறது. சூப்பர் ஜட்ஜ் ஏ.ஆர். ரஹ்மான் அறிவித்துள்ள இந்த இசைத் தேடல் நிகழ்ச்சியில், தங்களது பாடும் திறமையை வெளிப்படுத்த விரும்பும் இளம் பாடகர்கள் கலந்து கொள்ளலாம்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள இளம் இசை ஆர்வலர்களுக்கு தங்களது குரலையும் திறமையையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும் வகையில் ‘தமிழ் ஐடல்’ ஆடிஷன்கள் நடைபெற்று வருகின்றன. இது வெறும் ஆடிஷனாக மட்டுமின்றி, திறமையான பாடகர்களின் இசைப் பயணத்திற்கு புதிய தொடக்கத்தை உருவாக்கும் வாய்ப்பாகவும் அமையும்.

14 முதல் 30 வயது வரையிலானவர்கள் கோவையில் நடைபெறும் ஆடிஷனில் பங்கேற்கலாம்.

ஆடிஷன் நடைபெறும் இடம்

சங்கரா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி
துடியலூர் சாலை, சரவணம்பட்டி,
கோயம்புத்தூர் – 641 035

தேதி: செப்டம்பர் 6, 2026
நேரம்: காலை 9 மணி முதல்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இசைத் திறமைகளைத் தேடும் இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாக கோவை ஆடிஷன் அமையவுள்ளது. பாடுவதில் ஆர்வமும் திறமையும் கொண்ட இளம் தலைமுறையினர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது திறமையை வெளிப்படுத்தலாம்.

Sony VIZHA மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் ‘தமிழ் ஐடல்’, தமிழின் அடுத்த தலைமுறை இசைத் திறமைகளை அடையாளம் காணும் மிகப்பெரிய இசை முயற்சியாக உருவாகி வருகிறது.

கோவையைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த இசைத் தேடல் பயணம் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உங்கள் குரல் அடுத்த பெரிய இசைப் பயணத்திற்கான தொடக்கமாக இருக்கலாம்… கோவை, Get Ready!