மார்வெல் ஸ்டுடியோஸின் பிரம்மாண்ட படைப்பான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம் மீண்டும் இந்திய திரையரங்குகளில் வெளியாகிறது. ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ என வெளியாகும் இப்படம், செப்டம்பர் 25-ம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல்வேறு பிரீமியம் திரையிடல் வடிவங்களில் வெளியாகிறது.
இப்படத்திற்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. IMAX, Marvel Studios Infinity Vision, 4DX, MX4D, SCREEN X, Dolby Vision, HDR Barco மற்றும் ICE உள்ளிட்ட பிரீமியம் திரையிடல் வடிவங்களில் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படத்தை ரசிகர்கள் காண முடியும்.
மேலும், இந்த சிறப்பு வெளியீட்டின் முக்கிய அம்சமாக, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் பிரத்யேக காட்சியும் இடம்பெறுகிறது. ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் டிசம்பர் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
2019-ம் ஆண்டு வெளியான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’, மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் இன்ஃபினிட்டி சாகாவின் முக்கியமான இறுதி அத்தியாயமாக அமைந்தது. தானோஸின் செயலால் உலக மக்கள் தொகையில் பாதி பேர் அழிந்த பின்னர், மீதமுள்ள சூப்பர் ஹீரோக்கள் அந்த இழப்பிலிருந்து மீண்டு தங்களது வாழ்க்கையைத் தொடர முயற்சிக்கின்றனர்.
தானோஸின் செயல்களால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்து, அழிந்துபோன தங்களது அன்புக்குரியவர்களை மீட்டெடுக்கவும், உலகில் மீண்டும் அமைதியை நிலைநாட்டவும் அவெஞ்சர்ஸ் குழு ஒன்றிணைகிறது. இதையடுத்து தானோஸுக்கு எதிராக நடைபெறும் பிரம்மாண்டமான இறுதிப் போரே திரைப்படத்தின் முக்கியமான பகுதியாக அமைந்துள்ளது.
மீண்டும் வெளியாகும் ‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படத்தை பிரம்மாண்டமான திரை மற்றும் மேம்பட்ட ஒலி தொழில்நுட்பத்துடன் ரசிகர்கள் அனுபவிக்கும் வகையில் பல்வேறு பிரீமியம் லார்ஜ் ஃபார்மட் திரையிடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, Marvel Studios Infinity Vision சான்றிதழ் பெற்ற திரையரங்குகள் பெரிய திரைகள், அதிக ஒளிர்வு கொண்ட காட்சிகள் மற்றும் மேம்பட்ட ஒலி அமைப்புகளுடன் திரைப்பட அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளன.
கெவின் ஃபெஜ் தயாரித்துள்ள இப்படத்தை ஆண்டனி ரூஸோ மற்றும் ஜோ ரூஸோ ஆகியோர் இயக்கியுள்ளனர். லூயிஸ் டி’எஸ்போசிட்டோ, விக்டோரியா அலோன்சா, மைக்கேல் கிரில்லோ, டிரின் ட்ரான், ஜான் ஃபேவ்ரோ, ஜேம்ஸ் கன் மற்றும் ஸ்டான் லீ ஆகியோர் நிர்வாகத் தயாரிப்பாளர்களாகப் பணியாற்றியுள்ளனர்.
‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்: என்கோர்’ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் IMAX, Marvel Studios Infinity Vision, 4DX, MX4D, SCREEN X, Dolby Vision, HDR Barco மற்றும் ICE உள்ளிட்ட பிரீமியம் திரையிடல் வடிவங்களில் வெளியாகிறது.

