சென்னையில் ‘Chennai District Masters Athletic Championship 2026’ தடகளப் போட்டி தொடக்கம்!

6

சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கம் சார்பில் 30 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் வீரர்களுக்கான ‘Chennai District Masters Athletic Championship 2026’ தடகளப் போட்டி சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தின் Outdoor Stadium-ல் இன்று (அக்டோபர் 3) தொடங்கியது.

சென்னை மாவட்ட மாஸ்டர்ஸ் தடகள சங்கத்தின் தலைவர் M. செண்பகமூர்த்தி, செயலாளர் K. சுரேஷ், பொருளாளர் சசிகலா மற்றும் சங்கத்தின் கமிட்டி உறுப்பினர்கள் இணைந்து எடுத்த முடிவின் அடிப்படையில் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டியின் தொடக்க விழாவில் நடிகர் சூரி, நடிகர் விஜய் ஆண்டனி, SDAT சிறப்பு அதிகாரியும் Mission Olympic 2036-ன் Joint Chief Executive Officer-ுமான A. மயில்வாகனன் IPS, Fon Fore Chemicals Group நிறுவனத்தின் Executive Director சுர்ய பிரகாஷ் M.P மற்றும் SNJ Group of Companies தொழிலதிபர் S.N. ஜெயமுருகன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் தடகள வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு கருத்துகளும் பகிரப்பட்டன.

இன்றும் நாளையும் நடைபெறும் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 30 வயதுக்கு மேற்பட்ட பல்வேறு தடகள வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். பல்வேறு தடகளப் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

மாஸ்டர்ஸ் தடகள வீரர்களுக்கு போட்டியிடுவதற்கான வாய்ப்பை உருவாக்குவதுடன், அவர்களின் உடல் ஆரோக்கியம் மற்றும் விளையாட்டு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.