ரஜினிகாந்துடன் மீண்டும் இணையும் நயன்தாரா… ‘தர்மன்’ படத்தின் புதிய அப்டேட்டை வெளியிட்ட ராஜ்கமல் ஃபிலிம்ஸ்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிகை நயன்தாரா இணைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் அஸ்வத் மரிமுத்து இயக்கும் திரைப்படம் ‘தர்மன்’. இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார். அதிரடியான சண்டைக் காட்சிகளை அன்பறிவ் மாஸ்டர்ஸ் வடிவமைக்கின்றனர். முன்னணி நட்சத்திரங்களும் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களும் இணைந்துள்ள இப்படம், பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகி வருகிறது.
இந்நிலையில், நயன்தாரா இப்படத்தில் இணைந்திருப்பது குறித்த அறிவிப்பை ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் வெளியிட்டுள்ளது. ரஜினிகாந்த் – நயன்தாரா கூட்டணி ஏற்கெனவே ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், இந்தப் புதிய இணைப்பு ‘தர்மன்’ படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.
பிரம்மாண்டமான காட்சிகள், விறுவிறுப்பான திரைக்கதை மற்றும் அதிரடி ஆக்ஷன் அம்சங்களுடன் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நயன்தாராவின் வருகையுடன் படத்தின் அடுத்தகட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்களின் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
ரஜினிகாந்த், நயன்தாரா, அஸ்வத் மரிமுத்து, அனிருத் ரவிச்சந்தர், அன்பறிவ் எனப் பலரும் இணைந்துள்ள ‘தர்மன்’ திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
