‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ படத்தின் ஐந்து புதிய போஸ்டர்கள் வெளியீடு – எதிர்பார்ப்பை அதிகரிக்கும் மார்வெல் ஸ்டுடியோஸ்!
டாக்டர் டூமின் மிரட்டலான தோற்றத்துடன் வெளியான போஸ்டர்கள் – டிசம்பர் 17 முதல் இந்தியத் திரையரங்குகளில் நான்கு மொழிகளில் வெளியாகிறது!
இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்பட நிகழ்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் ஐந்து புதிய போஸ்டர்களை மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது. படத்தின் வெளியீட்டுத் தேதி நெருங்கி வரும் நிலையில் வெளியாகியுள்ள இந்தப் போஸ்டர்கள், மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன.
குறிப்பாக, மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் சக்திவாய்ந்த வில்லன்களில் ஒருவரான டாக்டர் டூமின் தோற்றம் இந்தப் புதிய போஸ்டர்களில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இதனால் படத்தின் கதைக்களம் மற்றும் அதில் இடம்பெறவுள்ள அதிரடியான மோதல்கள் குறித்த ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்துள்ளது.
முன்னணி நடிகர்கள் பலர் இணைந்துள்ள பிரம்மாண்டக் கூட்டணி, மிரட்டலான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கதைக்களம் எனப் பல சிறப்பம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் திரைப்படங்களுக்கே உரிய பிரம்மாண்டம், பிரமிக்க வைக்கும் காட்சியமைப்புகள் மற்றும் விறுவிறுப்பான கதை சொல்லல் ஆகியவற்றுடன் ரசிகர்களுக்கு மறக்க முடியாத திரையரங்க அனுபவத்தை வழங்க இப்படம் தயாராகி வருகிறது.
மேலும், 4DX, RealD 3D, ScreenX, டால்பே மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் உள்ளிட்ட பிரீமியம் திரையரங்கத் தொழில்நுட்பங்களில் இப்படம் வெளியாகவுள்ளது.
மார்வெல் ஸ்டுடியோஸின் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் வரும் டிசம்பர் 17ஆம் தேதி இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.




