இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் சங்கமித்த பிரம்மாண்டத் திருமண விழா! – கண்ணன் ரவி இல்லத் திருமணத்தில் நட்சத்திரங்கள் பங்கேற்பு!

7

KRG குழுமத்தின் இணைத் தயாரிப்பாளர் தீபக் ரவி – செந்தாமரை திருமணம் சென்னையில் கோலாகலம்; பல்வேறு திரையுலகங்களைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்று வாழ்த்து!

KRG Group of Companies நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கண்ணன் ரவி – KRD Hospitality நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி தீபா ரவி தம்பதியினரின் மகனும், KRG Productions நிறுவனத்தின் இணைத் தயாரிப்பாளருமான தீபக் ரவி, வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் D.M. கதிர் ஆனந்த் – கிங்ஸ்டன் கல்வி நிறுவனங்களின் தலைவர் சங்கீதா கதிர் ஆனந்த் தம்பதியினரின் மகள் கே. செந்தாமரையை மணந்தார்.

இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அக்டோபர் 31ஆம் தேதியும், திருமணம் நவம்பர் 1ஆம் தேதியும் சென்னையில் வெகு விமரிசையாக நடைபெற்றது. நீலாங்கரையில் உள்ள R.K. கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்ற இந்த விழா, திரையுலக நட்சத்திரங்கள் சங்கமித்த பிரம்மாண்டக் கொண்டாட்டமாக அமைந்தது.

பல்வேறு திரையுலகங்களைச் சேர்ந்த நட்சத்திரங்கள் பங்கேற்பு!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழித் திரையுலகங்களைச் சேர்ந்த முன்னணி நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என ஏராளமான திரைப்பிரபலங்கள் இந்தத் திருமண விழாவில் கலந்துகொண்டனர். மேலும், அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

நட்சத்திரங்களின் வருகை மற்றும் பிரம்மாண்டமான ஏற்பாடுகளால் கண்ணன் ரவி இல்லத் திருமண விழா அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

சர்வதேச அளவில் வளர்ந்து வரும் KRG குழுமம்!

துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச அளவில் செயல்பட்டு வரும் Kannan Ravi Group (KRG), கட்டுமானம், எலக்ட்ரோ மெக்கானிக்கல் சேவைகள், ரியல் எஸ்டேட், ஹாஸ்பிட்டாலிட்டி உள்ளிட்ட பல்வேறு தொழில் துறைகளில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. ரவி கண்ணன் தலைமையில் வளர்ந்து வரும் இக்குழுமம், தற்போது இந்தியத் திரையுலகிலும் தனது தடத்தைப் பதித்து வருகிறது.

திரைப்படத் தயாரிப்பிலும் KRG Productions!

KRG Productions சார்பில் ‘இராவண கோட்டம்’, ‘தலைவர் தம்பி தலைமையில்’, ‘TN 2026’ உள்ளிட்ட திரைப்படங்களைத் தயாரித்துள்ள கண்ணன் ரவி, தொடர்ந்து பல புதிய திரைப்படங்களையும் தயாரித்து வருகிறார். இந்நிறுவனத்தின் திரைப்படத் தயாரிப்புப் பணிகளில் இணைத் தயாரிப்பாளராகத் தீபக் ரவியும் முக்கியப் பங்காற்றி வருகிறார்.

சர்வதேச அளவில் பல்வேறு தொழில்களிலும், இந்தியத் திரைப்படத் துறையிலும் தனது பயணத்தைத் தொடர்ந்து வரும் KRG குழுமத்தின் குடும்ப விழாவாக நடைபெற்ற இந்தத் திருமணம், திரையுலகம் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நிறைவடைந்தது.