சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தர்மன்’ படத்தில் இணைந்தார் ஸ்ரீலீலா!

13

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில் நடிகை ஸ்ரீலீலா இணைந்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே நட்சத்திரக் கூட்டணியுடன் உருவாகி வரும் இப்படத்தில் ஸ்ரீலீலாவின் வருகை, படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

‘தர்மன்’ திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, அன்பறிவ் சண்டைக் காட்சிகளை வடிவமைக்கின்றனர். புகழ்பெற்ற கலைஞர்களின் கூட்டணி, பிரம்மாண்டமான கதை சொல்லல் மற்றும் தொழில்நுட்ப நேர்த்தியுடன் இப்படம் உருவாகி வருகிறது.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா நிறுவனங்கள் சார்பில் கமல்ஹாசன் மற்றும் ஆர். மகேந்திரன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

ஸ்ரீலீலாவின் வருகை குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள படக்குழு, ‘தர்மன்’ திரைப்படத்தின் நட்சத்திரக் கூட்டணி மேலும் விரிவடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. புதிய நட்சத்திர வரவு, பிரம்மாண்டமான கூட்டணி எனப் பல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள ‘தர்மன்’ திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.