ஓவியா – ராஜாபிரபு நடிக்கும் ‘கிளிக்’ – இளமை, சஸ்பென்ஸ் கலந்த யூத்ஃபுல் என்டர்டெய்னராக உருவாகியுள்ளது!

39

ஜேஆர்பி இன்டர்நேஷனல் சினி ஆர்ட்ஸ் (JRP International Cine Arts) நிறுவனம் சார்பில் ராஜாபிரபு தயாரித்து, சுந்தர் மஹாஸ்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கிளிக்’ (Click). இப்படத்தில் ஓவியா மற்றும் ராஜாபிரபு முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தைத் தயாரிப்பதுடன் ராஜாபிரபுவே கதாநாயகனாகவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய இளம் தலைமுறையினரைக் கவரும் வகையில், ஜென் சி (Gen-Z) பின்னணியில் இளமைத் துள்ளல், சஸ்பென்ஸ் மற்றும் சுவாரசியமான பொழுதுபோக்கு அம்சங்களுடன் இப்படம் உருவாகியுள்ளது. விறுவிறுப்பான திரைக்கதையுடன் உறவுகளின் உற்சாகத்தையும், உணர்ச்சிகளின் எதிர்பாராத திருப்பங்களையும் இணைத்து, ரசிகர்களுக்கு முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்கும் வகையில் ‘கிளிக்’ திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஓவியா, ராஜாபிரபு, சுந்தர் மஹாஸ்ரீ, அஸ்மிதா, அமுதவாணன், ‘லொள்ளு சபா’ மனோகர், சல்மா பைரோஸ், அருள் செல்வம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அருண் குமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஜோசப் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். சையத் ஜாஃபர் நிர்வாகத் தயாரிப்புப் பணிகளைக் கவனித்துள்ளார்.

யூத்ஃபுல் சஸ்பென்ஸ் என்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘கிளிக்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பான அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.