‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ இறுதி டிரெய்லர் வெளியீடு – டாக்டர் டூமை எதிர்கொள்ள ஒன்றிணையும் அவெஞ்சர்ஸ், எக்ஸ்-மென், ஃபென்டாஸ்டிக் ஃபோர்!

9

மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின் இறுதி டிரெய்லர் வெளியாகியுள்ளது. புதிய டிரெய்லர் வெளியானதைத் தொடர்ந்து, இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் பல்வேறு சூப்பர் ஹீரோக்கள் ஒரே திரையில் ஒன்றிணைந்து, இதுவரை சந்தித்திராத மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொள்ளத் தயாராகும் காட்சிகள் இறுதி டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன. மார்வெல் உலகின் சக்திவாய்ந்த வில்லன்களில் ஒருவரான டாக்டர் டூமை எதிர்கொள்ள அவெஞ்சர்ஸ், எக்ஸ்-மென், ஃபென்டாஸ்டிக் ஃபோர் மற்றும் தண்டர்போல்ட்ஸ் ஆகிய அணிகள் ஒன்றிணைகின்றன. மூன்று வெவ்வேறு பிரபஞ்சங்களைச் சேர்ந்த சூப்பர் ஹீரோக்கள் தங்களது இருப்புக்கே அச்சுறுத்தலாக அமையும் பேராபத்தை எதிர்கொள்வதும், ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் எதிர்காலத்திற்காகப் போராடுவதுமே இப்படத்தின் மையக்கருவாக அமைந்துள்ளது.

ஆண்டனி மற்றும் ஜோ ரூஸோ இயக்கியுள்ள இப்படத்திற்கு ஸ்டீபன் மெக்ஃபீலி மற்றும் மைக்கேல் வால்ட்ரான் திரைக்கதை எழுதியுள்ளனர். கெவின் ஃபீஜ், லூயிஸ் டி’எஸ்போசிட்டோ மற்றும் ஜொனாதன் ஸ்வார்ட்ஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

ராபர்ட் டவுனி ஜூனியர், கிறிஸ் எவன்ஸ், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், பெட்ரோ பாஸ்கல், பால் ரூட், அந்தோணி மேக்கி, ஃப்ளாரன்ஸ் பக், வனேசா கிர்பி, எபான் மோஸ் பாக்ராக், வியாட் ரஸ்ஸல், சானிங் டாட்டம், சிமு லியு, ஹேலி அட்வெல், டாம் ஹிடில்ஸ்டன், ஜேம்ஸ் மார்ஸ்டன், ஜோசப் க்வின், செபாஸ்டியன் ஸ்டான், டேவிட் ஹார்பர், லெட்டிடியா ரைட், லூயிஸ் புல்மேன், கெல்சி கிராமர், கேத்ரின் நியூட்டன், டேனி ராமிரெஸ், வின்ஸ்டன் டியூக், ஆலன் கம்மிங், ஹன்னா ஜான் கமென், ரெபேக்கா ரோமிஜின், டெனோச் ஹுர்டா மெஜியா, மாபெல் கடேனா, அலெக்ஸ் லிவினல்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் இயன் மெக்கெல்லன் மற்றும் பேட்ரிக் ஸ்டீவர்ட்டும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் அமெரிக்காவில் வெளியாகும் டிசம்பர் 18-ஆம் தேதிக்கு ஒரு நாள் முன்னதாக, டிசம்பர் 17-ஆம் தேதி இந்தியத் திரையரங்குகளில் வெளியாகிறது. ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படம், மார்வெல் ஸ்டுடியோஸ் வழங்கும் இன்பினிட்டி விஷன் உள்ளிட்ட பிரீமியம் திரையரங்குத் தொழில்நுட்பங்களிலும் ரசிகர்களுக்கு பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை வழங்கத் தயாராகியுள்ளது.