பெண் காவலர்களின் அதிரடி விசாரணையும் கலகலப்பான நட்பும்! – டிசம்பர் 14 முதல் சோனி விழாவில் ‘மேடம் போலீஸ்’!

14

சோனி விழா (Sony VIZHA) தொலைக்காட்சியில் புதிய கிரைம் காமெடி தொடராக உருவாகியுள்ள ‘மேடம் போலீஸ் – நாங்க இருக்க பயமேன்’ டிசம்பர் 14, 2026 முதல் ஒளிபரப்பாக உள்ளது. திவ்யா கணேசன், ஸ்ரீது கிருஷ்ணன் நடிப்பில், இயக்குநர் ஏ.எல். விஜய் தயாரிப்பில் உருவாகியுள்ள இத்தொடர் தினமும் மாலை 7 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

புறநகர்ப் பகுதியில் இயங்கும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை மையமாகக் கொண்டு இந்தத் தொடர் உருவாகியுள்ளது. இதில் திவ்யா கணேசன், இன்ஸ்பெக்டர் சத்யா மணிமாறனாகவும், ஸ்ரீது கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் மீரா இளங்கோவனாகவும் நடித்துள்ளனர். இவர்களுடன் இணைந்து பணியாற்றும் பெண் காவலர்கள், குடும்பப் பிரச்சினைகள், காணாமல் போனவர்கள் தொடர்பான வழக்குகள், சைபர் குற்றங்கள் எனப் பல்வேறு வழக்குகளை விசாரித்து தீர்வு காண்கின்றனர்.

டி ஸ்டுடியோஸ் (D Studios) சார்பில் இயக்குநர் ஏ.எல். விஜய் தயாரித்துள்ள இந்தத் தொடர், குற்றப் புலனாய்வு, நகைச்சுவை மற்றும் அன்றாட வாழ்க்கையில் நிகழும் சம்பவங்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இன்ஸ்பெக்டர் சத்யா மணிமாறன் கதாபாத்திரம் கதையின் மையமாக அமைந்துள்ளது. உறுதியும் இரக்க குணமும் கொண்ட காவல் அதிகாரியாக வரும் அவர், ஒவ்வொரு பிரச்சினைக்கும் வழக்கமான அணுகுமுறையைத் தாண்டி தீர்வு காண முயற்சிக்கிறார். அவரும் அவரது குழுவினரும் இணைந்து, பொதுமக்கள் நம்பிக்கையுடன் அணுகும் காவல் நிலையமாகத் தங்கள் பணியிடத்தை மாற்ற முயற்சிப்பதே தொடரின் முக்கிய அம்சமாக உள்ளது.

வழக்குகளை விசாரிப்பதுடன், காவலர் சீருடைக்கு அப்பால் அந்தப் பெண்களின் நட்பு, குடும்பம், ஆசைகள் மற்றும் அன்றாடச் சவால்களையும் இந்தத் தொடர் பேசுகிறது. குழுவினருக்கு இடையிலான நட்பும் நகைச்சுவையான உரையாடல்களும் கதைக்குக் கூடுதல் சுவை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளன.

இன்ஸ்பெக்டர் சத்யா மணிமாறன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறித்து திவ்யா கணேசன் கூறுகையில், “சத்யா கதாபாத்திரத்தில் என்னைக் கவர்ந்தது, அவர் அணிந்திருக்கும் சீருடை மட்டுமே அவரது பலத்தைத் தீர்மானிப்பதில்லை என்பதுதான். அவர் தன்னம்பிக்கையும் துணிச்சலும் கொண்டவர். அதே நேரத்தில், மனிதர்களை அணுகுவதிலும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதிலும் இரக்க குணம், உள்ளுணர்வு மற்றும் நகைச்சுவை உணர்வையும் வெளிப்படுத்துகிறார். இந்தக் கலவை ஒரு நடிகையாக எனக்கு மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. இந்தத் தொடரில் விசாரணைகளும் எதிர்பாராத சம்பவங்களும் இருப்பதுடன், நிறைய அன்பும் நகைச்சுவையும் இருக்கிறது. ஒவ்வொரு வழக்கையும் இந்தக் குழுவினர் தங்களுக்கே உரிய பாணியில் எப்படித் தீர்க்கிறார்கள் என்பதைப் பார்வையாளர்கள் ரசிப்பார்கள் என நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கிரைம், காமெடி, நட்பு மற்றும் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து உருவாகியுள்ள ‘மேடம் போலீஸ் – நாங்க இருக்க பயமேன்’ தொடர், டிசம்பர் 14, 2026 முதல் தினமும் மாலை 7 மணிக்கு சோனி விழா (Sony VIZHA) தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.