மலையாளத் திரையுலகின் சிறந்த படைப்புகளைத் தமிழ் ரசிகர்களிடமும் கொண்டு சேர்க்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளது கேரளாவைச் சேர்ந்த முன்னணி ஓடிடி தளமான மனோரமாமேக்ஸ் (ManoramaMAX). நகைச்சுவை, குடும்ப உணர்வுகள், ஆக்ஷன், த்ரில்லர் எனப் பல்வேறு ஜானர்களில் உருவாகியுள்ள மலையாளத் திரைப்படங்களைத் தமிழ் மொழியில் வெளியிட்டு, தமிழ் ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு அனுபவத்தை இத்தளம் விரிவுபடுத்தி வருகிறது.
தற்போது மனோரமாமேக்ஸ் தளத்தில் தமிழில் பார்க்கக் கிடைக்கும் மலையாளத் திரைப்படங்களின் பட்டியலில் ‘பல்லொட்டி’, ‘பைங்கிளி’, ‘தி தர்ட் மர்டர்’, ‘மிஸ்டர் & மிஸஸ் பேச்சுலர்’, ‘கட்டாலன்’, ‘இட்ஸ் அ மெடிகல் மிராக்கிள்’ உள்ளிட்ட படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில், ‘Her’ திரைப்படமும் இந்த வார இறுதியில் தமிழ் மொழியில் வெளியாகவுள்ளது.
ஒவ்வொரு திரைப்படமும் தனித்துவமான கதைக்களத்தையும், வெவ்வேறு வகையான திரையனுபவத்தையும் வழங்கும் வகையில் அமைந்துள்ளன. ‘பல்லொட்டி’, ‘பைங்கிளி’ ஆகிய திரைப்படங்கள் நகைச்சுவையுடன் உணர்வுப்பூர்வமான கதையையும் கொண்டுள்ளன. ‘தி தர்ட் மர்டர்’ பரபரப்பான த்ரில்லர் அனுபவத்தை வழங்குகிறது. ‘மிஸ்டர் & மிஸஸ் பேச்சுலர்’ நகைச்சுவை ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ள நிலையில், ‘கட்டாலன்’ அதிரடி ஆக்ஷன் காட்சிகளை விரும்புபவர்களுக்கான படமாக உள்ளது. அதேபோல், வழக்கமான பாணியிலிருந்து மாறுபட்ட நகைச்சுவை கலந்த த்ரில்லர் அனுபவத்தை ‘இட்ஸ் அ மெடிகல் மிராக்கிள்’ வழங்குகிறது. இந்தப் பட்டியலில் புதிதாக இணையவுள்ள ‘Her’ திரைப்படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் மற்றும் 20,000 மணி நேரத்திற்கும் அதிகமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைக் கொண்டுள்ள மனோரமாமேக்ஸ் தளத்தில், திரைப்படங்கள் மட்டுமின்றி மழவில் மனோரமா மற்றும் மனோரமா நியூஸ் தொலைக்காட்சிகளின் பிரபல நிகழ்ச்சிகளையும் கண்டு ரசிக்கலாம். பல்வேறு மொழிகளில் உள்ளடக்கங்களை வழங்கி வரும் இத்தளம், மொழி வேறுபாடுகளைக் கடந்து தரமான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளையும் திரைப்படங்களையும் அதிகமான ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது.
தமிழில் மலையாளத் திரைப்படங்களைத் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வரும் மனோரமாமேக்ஸ், பல்வேறு ஜானர்களில் புதிய படைப்புகளைத் தனது தளத்தில் இணைப்பதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கான பொழுதுபோக்கு வாய்ப்புகளை மேலும் அதிகரித்து வருகிறது. மலையாள சினிமாவின் வித்தியாசமான கதைகளையும் படைப்புகளையும் தமிழ் மொழியில் ரசிக்க விரும்பும் ரசிகர்களுக்கு மனோரமாமேக்ஸ் ஒரு புதிய தேர்வாக அமைந்துள்ளது.
