முதல் முறையாக ஒரு பெண் இருக்கும் இடத்தில் நான் பாதுகாப்பாக உணர்ந்தேன் – நடிகர் ரவி மோகன் பேசியது

71

Dawn Pictures தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா முரளி, ஶ்ரீலீலா நடிப்பில், சுதா கொங்கரா இயக்கத்தில், உருவாகியுள்ள பிரம்மாண்டத் திரைப்படம் “பராசக்தி”

 

இயக்குனர் மணிரத்தினம்..பேசியது..,

சுதா என்னிடம் ஆயுத எழுத்து, யுவா என ரெண்டு படங்களில் வேலை செய்தார். அந்தப் படங்கள்ல அவங்க கண்டினியூட்டி இன்சார்ஜ்.

எப்போதும் கையில ஒரு கேமரா இருக்கும். நிறைய ஆர்ட்டிஸ்ட், நிறைய ஹீரோக்கள், நிறைய ஹீரோயின்கள்கூட வேலை பார்த்தாங்க. ஆனால் ஒரு ஆர்ட்டிஸ்ட் கூட சுதாகிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது. ஷூட்டிங் முடிஞ்சு வெளிய போனால்கூட சுதாவைத் தாண்டித்தான் போக முடியும். கண்டினியூட்டி தவறுகளைப் பார்த்துவிட்டுத்தான் விடுவாங்க. அப்போதே சுதாவைப் பார்த்து பயப்படாத ஆர்ட்டிஸ்ட்டே கிடையாது. அப்போவே அப்படின்னா, இப்போது சொல்லவே வேண்டாம். சிவகார்த்திகேயன் ஸ்கிரிப்ட்ஸ்லாம் ரொம்ப சரியாகத் தேர்ந்தெடுக்கிறார். Wishing you a very very best என்றதும் சிவகார்த்திகேயன் எழுந்து நின்று நன்றி தெரிவித்தார்

இயக்குனர் சுதா கொங்கரா பேசியது.

நம் வாழ்வில் இது முடியாது என சொல்லும்போது மட்டும்தான் அதை செய்து காண்பிக்க வேண்டும் என எனது குருநாதர் மணிரத்னம் சொல்லிக் கொடுத்துள்ளார். பராசக்தியை உருவாக்க முடியாது என நினைத்தபோது, அதை செய்து காண்பிக்க வேண்டும் என தோன்றியது. பராசக்தியை உருவாக்க எனக்கு துணை நின்ற பராசக்திகளுக்கு நன்றி. பராசக்தியை பற்றி இனி நான் பேச விரும்பவில்லை. பராசக்தியை பார்த்து நீங்கள் தான் பேச வேண்டும். நீங்கள் பேசுவது எனது பேச்சாக இருக்க வேண்டும்.

நடிகர் ரவி மோகன் பேசியது..

நான் நாயகனாக நடிக்கும் இசை வெளியீட்டு விழாவில் பேசுவது கொஞ்சம் கூச்சமாக இருக்கும். ஆனால் எஸ்கே படத்தில் பேசுவது அப்படி இல்லை. பலரின் கடின உழைப்பாளி உருவாக்கப்பட்ட தங்கம் பராசக்தி இந்த வருடத்தின் மிக சிறந்த படமாக பராசக்தி வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

சிவகார்த்திகேயன் எதுவுமே இல்லாமல் இது போன்ற மேடைகளில் ஆரம்பித்து தற்போது இந்த இடத்திற்கு வந்திருக்கிறார் என்றால் இவர் அனைத்துக்கும் தகுதியானவர்.
அவர் இன்னும் பெரிய மேடை ஏறி பேச வேண்டும் அதற்க்கு நீங்கள்(ரசிகர்கள்) கூடவே இருக்க வேண்டும்.

பொதுவாக பல நல்ல ஆண்கள் இருக்கும் இடத்தில் ஒரு பெண் பாதுகாப்பாக உணர்வார்கள் என்று சொல்வார்கள். ஆனால் முதல் முறையாக ஒரு பெண் (சுதா கொங்கரா) இருக்கும் இடத்தில் நான் பாதுகாப்பாக உணர்ந்தேன். எந்த தடைகள் வந்தாலும் தனி ஆளாக நின்று எதிர்கொள்வது என்பது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்கப் போகிறது. இந்த தீயை (பராசக்தி) நிறைய பேர் அணைக்க வெளியில் முயற்சி செய்தார்கள். இந்த தீ ஆபத்தான தீயில்லை கடவுள் முன்பு ஏற்றப்படுகின்ற அகல்விளக்கு.

பராசக்தியில் ஏன் வில்லனாக பண்ணுகிறீர்கள் என்று நிறைய கேட்டார்கள். எனக்கு ரெண்டே காரணம் தான் இருந்தது ஒன்று சுதாவின் கதை மற்றொன்று சுதா. ஆனால் இந்த முடிவு குறித்து தற்போது நினைத்துப்பார்க்கையில் எந்த கவலையும் இல்லை மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது. என்னை இத்தனை நாட்களாக ஹீரோவாக பார்த்தீர்கள் இனிமேல் என்னை வில்லனாக பார்ப்பீர்கள். இப்படி தான் ஜாலியாக பேசுவேன்.

இந்தப் படம் சுயமரியாதையை காப்பாற்றுகின்ற படம். நானும் என்னுடைய வாழ்க்கையில் என்னுடைய சுயமரியாதையை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்திருக்கிறேன். முதுகில் அடிப்பவர்களை பற்றி எனக்கு கவலை கிடையாது. கண்ணுக்கு தெரிபவர்களைப் பற்றிதான் எனக்கு கவலை. அனைவருக்கும் ஒரு அண்ணனாக சொல்கிறேன் சுயமரியாதையை மட்டும் இழக்கக்கூடாது. இதை மட்டும் மனதில் வைத்துக் கொண்டால் நல்ல மனிதனாக இந்த உலகத்தில் வாழ முடியும். இப்படத்தை எல்லோரும் கொண்டாடுங்கள் நன்றி.

“பராசக்தி” திரைப்படம் பொங்கல் கொண்டாட்டமாக வரும் ஜனவரி 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.