தமது கெளரவ உறுப்பினரை இழந்து நிற்கும்., ‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’ ஆழ்ந்த இரங்கல் !!

127

தமிழ் திரையுலகின் சிறந்த இயக்குநர், இசையமைப்பாளர் , நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா , தயாரிப்பாளர் , பத்திரிகையாளர்… என தனது பன்முகத் திறமையால் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் தனி இடம்பிடித்திருந்த திரு. கே. பாக்யராஜ் அவர்கள் ‘மறைந்தார்’ என்ற செய்தி மிகுந்த வேதனையையும் பேரதிர்ச்சியையும் அளிக்கிறது. வாசகர்களிடம் பேராதரவு பெற்றிருந்த ‘பாக்யா’ இதழின் ஆசிரியர் , ஆகையால் ., எமது 71 ஆண்டு பாரம்பரியம் மிக்க ‘சினிமா பத்திரிகையாளர் சங்கத் ‘தின் கெளரவ உறுப்பினருமான திரு. கே.பாக்யராஜை இழந்தது எமது பெருமைக்குரிய கெளரவ உறுப்பினர்களில் ஒருவர் அவர்… என்ற வகையிலும் எமது சங்கத்திற்கு பேரிழப்பாகும் !

எளிமையான கதைகளையும், நகைச்சுவை கலந்த குடும்ப உணர்வுகளையும் தனக்கே உரிய பாணியில் படைத்து, தமிழ் சினிமாவிற்கு எண்ணற்ற மறக்க முடியாத படைப்புகளை வழங்கியவர். பல தலைமுறை திரைப்படக் கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் அவர் ஒரு உந்துசக்தியாக விளங்கினார். அவரது மறைவு தமிழ் திரைப்பட உலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரையுலகினருக்கும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இயக்குநர் கே. பாக்யராஜ் அவர்களின் ஆன்மா சாந்தியடைய 71 ஆண்டு பாரம்பரியம் மிக்க ‘சினிமா பத்திரிகையாளர் சங்க ‘ உறுப்பினர்கள் அனைவரும் இறைவனை பிரார்த்திக்கிறோம்.

ஆழ்ந்த இரங்கலுடன்,

‘சினிமா பத்திரிகையாளர் சங்கம்’.