இயக்குநர் பிரசாந்த் வர்மா உருவாக்கி வரும் ‘ஹனுமேன்’ (HanuMan) சினிமாடிக் யுனிவர்ஸின் அடுத்த பிரம்மாண்ட திரைப்படமான ‘மகாகாளி’ (Mahakali) தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நுழைந்துள்ளது.
125 நாட்கள் நடைபெற்ற பிரம்மாண்டமான படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள படக்குழு, தற்போது இறுதி ஷெட்யூல் படப்பிடிப்பை தொடங்கியுள்ளது.
இந்த இறுதிக்கட்ட படப்பிடிப்பில் நடிகர்கள் அக்ஷய் கன்னா மற்றும் ரோகித் சரஃப் தங்களது காட்சிகளை நிறைவு செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
IMAX திரையரங்க அனுபவத்திற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டு வரும் இப்படம், காட்சியமைப்பு மற்றும் தொழில்நுட்பத் தரத்தில் புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் தயாராகி வருகிறது.
பிரசாந்த் வர்மா இயக்கத்தில் உருவாகும் இந்த திரைப்படத்தை ஆர்.கே. துக்கல் தயாரிக்கிறார். படத்தில் பூஜா கொல்லூரு, பூமி ஷெட்டி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், படத்தின் வெளியீட்டு தேதி மற்றும் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் பல முக்கிய அப்டேட்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
‘ஹனுமேன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு உருவாகி வரும் ‘மகாகாளி’, பிரசாந்த் வர்மாவின் சினிமாடிக் யுனிவர்ஸில் மிகவும் எதிர்பார்க்கப்படும் திரைப்படங்களில் ஒன்றாக உருவெடுத்து வருகிறது.
