மன்னர் முத்து – சந்தோஷ் நாராயணன் கூட்டணியில் உருவான ‘மன்னாரு’ பாடல் வெளியீடு!

4

தமிழ் இசை உலகில் புதிய இசைப் பயணத்தைத் தொடங்கும் வகையில், ரகிட என்டர்டெயின்மென்ட் சார்பில் மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் முதல் இசை வெளியீடாக ‘மன்னாரு’பாடல் வெளியாகியுள்ளது.

தனது தனித்துவமான குரலால் மன்னர் முத்து பாடியுள்ள இந்தப் பாடலை கென் ராய்சன் இயக்கியுள்ளார். விறுவிறுப்பான காட்சியமைப்புடன், உற்சாகமான இசையும் இணைந்துள்ள ‘மன்னாரு’, ரசிகர்களுக்கு வித்தியாசமான இசை மற்றும் காட்சி அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

மன்னர் முத்து மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் இந்தப் பாடல், ரகிட என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் அனைத்து முக்கிய இசைத் தளங்களிலும் வெளியாகியுள்ளது.

பாடல் வெளியாவதற்கு முன்பே இசை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள ‘மன்னாரு’ பாடல், மன்னர் முத்து மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து முன்னெடுக்கும் புதிய இசைப் பயணத்தின் தொடக்கமாக அமைந்துள்ளது.

தனித்துவமான குரல், உற்சாகமான இசை மற்றும் புதுமையான காட்சியமைப்பு ஆகியவற்றுடன் வெளியாகியுள்ள ‘மன்னாரு’, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.