ஜெயராம் – சிம்ரன் இணையும் புதிய ஃபேமிலி ரோம்-காம்… கோலாகலமாக நடைபெற்ற பூஜை!

44

ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய ஃபேமிலி ரோம்-காம் திரைப்படத்தின் பூஜை விழா சென்னையில் படக்குழுவினர் மற்றும் திரையுலகப் பிரபலங்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற்றது. பல்வேறு தலைமுறைகளின் வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் அவர்களுக்கிடையேயான புரிதலை நகைச்சுவையுடன் பதிவு செய்யும் வகையில் இப்படம் உருவாகிறது.

‘தேஜாவு’, ‘வித்தைக்காரன்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்த White Carpet Films சார்பில் K. விஜய் பாண்டி மற்றும் Redacted Studios சார்பில் Shanjan G. ஆகியோர் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர். The Show People சார்பில் ஆர்யா இப்படத்தை வழங்குகிறார். ‘ராட்சசி’, ‘கழுவேத்தி மூர்க்கன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய SY கௌதம்ராஜ் இப்படத்தை எழுதி இயக்குகிறார்.

ஃபேமிலி ரோம்-காம் என்டர்டெய்னராக உருவாகும் இப்படத்தின் கதை, Gen Z தலைமுறை, 2K தலைமுறை மற்றும் 90-களில் வளர்ந்த தலைமுறை ஆகியோருக்கு இடையிலான உறவுகள் மற்றும் அவர்களது வாழ்க்கையில் நடைபெறும் சுவாரஸ்யமான சம்பவங்களை மையமாகக் கொண்டுள்ளது. வெவ்வேறு தலைமுறையினரின் எண்ணங்கள், வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் அவர்களுக்கிடையேயான புரிதல் ஆகியவற்றை நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமான திரைக்கதையாக இப்படம் பதிவு செய்யவுள்ளது.

குடும்பத்துடன் இணைந்து ரசிக்கும் வகையிலான முழுமையான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகி வரும் இப்படத்தில் ஜெயராம் மற்றும் சிம்ரன் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘வாழை’ திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக கவனம் பெற்ற பொன்வேல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர்களுடன் தேவிகா சதீஷ், பகவதி பெருமாள் (பக்ஸ்) உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் இணைந்துள்ளனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவை தீபக் மேற்கொள்கிறார். அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். அருள் E. சித்தார்த் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். மகேந்திரன் கலை இயக்குநராக பணியாற்றுகிறார். பாடல்களுக்கு கார்த்திக் நேதா வரிகள் எழுதுகிறார். அனுஷா விஸ்வநாதன் நடன இயக்குநராக பணியாற்றுகிறார்.

M. முகமது சுபியர் ஆடை வடிவமைப்பையும், ஷயத் மாலிக் S ஒப்பனைப் பணிகளையும் கவனிக்கின்றனர். SN அஸ்ரஃப் தயாரிப்பு கட்டுப்பாட்டாளராகவும், D. உதயகுமார் தயாரிப்பு நிர்வாகியாகவும் பணியாற்றுகின்றனர். சரவணகுமார் கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும், சாய்ராம் எக்ஸிகியூட்டிவ் தயாரிப்பாளராகவும் உள்ளனர். விஜய் வெங்கடராமன் தயாரிப்பு ஒருங்கிணைப்பாளராக பணியாற்றுகிறார்.

கன்னதாசன் DKD விளம்பர வடிவமைப்பை மேற்கொள்கிறார். ஜெய்குமார் வைரவன் ஸ்டில்ஸ் பணிகளை கவனிக்கிறார். சதீஷ் (AIM) மக்கள் தொடர்புப் பணிகளை மேற்கொள்கிறார். ராஜ். கதிர்ஹாசன் இணை இயக்குநராக பணியாற்றுகிறார்.

இப்படத்தின் பூஜை விழாவில் தயாரிப்பாளர் Fivestar கதிரேசன், Drumsticks Productions தயாரிப்பாளர் விவேக், Shanthi Talkies தயாரிப்பாளர் அருண் விஷ்வா, இயக்குநர் H. வினோத், நடிகர் நட்டி, Stone Bench தயாரிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

பல்வேறு தலைமுறைகளின் உறவுகளையும், அவர்களுக்கிடையேயான சுவாரஸ்யமான சம்பவங்களையும் மையமாகக் கொண்டு உருவாகும் இந்தப் புதிய திரைப்படம் குறித்த மேலும் பல முக்கிய அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.