சிலம்பரசன் TR நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘அரசன்’. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சென்னை தரமணியில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள அரங்கில் ‘அரசன்’ படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. திட்டமிட்டபடி எவ்விதத் தொய்வும் இல்லாமல் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் நடிகர் சிலம்பரசன் TR, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் சந்தித்து, படத்தின் பணிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். ரசிகர்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வரும் இந்த மூவரின் கூட்டணி, ‘அரசன்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
‘வடசென்னை’ யுனிவர்ஸுடன் தொடர்புடைய கதைக்களத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில், சிலம்பரசன் TR உடன் ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
சிலம்பரசன் TR – வெற்றிமாறன் – அனிருத் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த கூட்டணி ‘அரசன்’ படத்தின் மூலம் இணைந்திருப்பது இப்படத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. குறிப்பாக, வெற்றிமாறனின் தனித்துவமான கதை சொல்லலும், சிலம்பரசன் TR-ன் திரை ஆளுமையும், அனிருத்தின் இசையும் இணையும் விதம் குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
படப்பிடிப்பு தொடர்ந்து வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ‘அரசன்’ திரைப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.