ஹிருது ஹரூனின் எனர்ஜிக்கு தீனி போடும் ‘டைகரியன் ரோர்’ – ‘டெக்ஸாஸ் டைகர்’ முதல் சிங்கிள் வெளியானது!

9

ஹிருது ஹரூன் நடிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான ‘டெக்ஸாஸ் டைகர்’ படத்தின் முதல் சிங்கிளான ‘டைகரியன் ரோர்’ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது. பாடலின் பிரம்மாண்டமான காட்சியமைப்பு, துள்ளலான இசை மற்றும் ஹிருது ஹரூனின் எனர்ஜிட்டிக்கான நடனம் ஆகியவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

‘தக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஹிருது ஹரூன், குறுகிய காலத்திலேயே தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார். ‘மும்பைகர்’, ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’, ‘முரா’, ‘மைனே பியார் கியா’, ‘பேட் கேர்ள்’, ‘டியூட்’ உள்ளிட்ட படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள அவர், தற்போது ‘டெக்ஸாஸ் டைகர்’ மூலம் கமர்ஷியல் என்டர்டெய்னர் கதாநாயகனாக புதிய பரிமாணத்தில் களமிறங்குகிறார்.

‘டைகரியன் ரோர்’ பாடலின் தொடக்கத்திலிருந்தே பிரம்மாண்டமான காட்சிகள், துள்ளலான இசை மற்றும் கண்கவர் நடனம் என பாடல் வண்ணமயமாக உருவாக்கப்பட்டுள்ளது. பாடலின் ஒவ்வொரு காட்சியிலும் ஹிருது ஹரூனின் திரை ஆளுமையும், நடனத்தில் வெளிப்படும் எனர்ஜியும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, பாடலின் டைனமிக் பெர்கஷன் இசையும், பல்வேறு இசைக் கருவிகளின் பயன்பாடும் அதன் கொண்டாட்ட உணர்வை மேலும் அதிகரிக்கின்றன.

‘டைகரியன் ரோர்’ பாடலுக்கு கெலித்தி, தமிழ் ஆதவன் மற்றும் ஆ.பா. ராஜா ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். கெலித்தி மற்றும் தமிழ் ஆதவன் இணைந்து பாடியுள்ள நிலையில், ஓஷோ வெங்கட்இசையமைத்துள்ளார். பாடலுக்கு கிடைத்து வரும் வரவேற்பு, ‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் இசை மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தை செல்வ குமார் திருமாறன் எழுதி இயக்கியுள்ளார். யுகே ஸ்குவாட் நிறுவனம் சார்பில் பாலாஜி குமார், பார்த்திபன் குமார், செல்வ குமார் திருமாறன் மற்றும் சுஜித் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

இப்படத்தில் ஹிருது ஹரூனுடன் சம்யுக்தா விஸ்வநாதன், ரோகிணி மொலெட்டி, அந்தோணி தாசன், சாச்சனா நமிதாஸ், ரமேஷ் திலக், பார்த்திபன், வஃபா கதீஜா, பீட்டர் கே, சம்யுக்தா சண்முகநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் தொழில்நுட்பக் குழுவில் ஓஷோ வெங்கட் இசையமைப்பாளராகவும், விஷ்ணு மணி வடிவுஒளிப்பதிவாளராகவும், பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பாளராகவும், கே.பி. நந்து கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர்.

‘டைகரியன் ரோர்’ பாடல் மூலம் ‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் இசை புரமோஷன் தற்போது தொடங்கியுள்ளது. ஹிருது ஹரூனின் வித்தியாசமான திரை தோற்றத்தையும், எனர்ஜி நிறைந்த நடனத்தையும் வெளிப்படுத்தும் இந்த முதல் சிங்கிள், படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது. விறுவிறுப்பு, ஆக்‌ஷன் மற்றும் கமர்ஷியல் என்டர்டெயின்மென்ட் அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘டெக்ஸாஸ் டைகர்’, ரசிகர்களுக்கு உற்சாகமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.