பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்‌ஷன் உலகம் – வெளியானது ‘World of Vettuvam’!

6

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் உலகத்தை அறிமுகப்படுத்தும் ‘World of Vettuvam’ வீடியோ வெளியாகியுள்ளது. தமிழ் மட்டுமின்றி, இந்தி, தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளிலும் இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

Learn and Teach Production நிறுவனத்துடன் இணைந்து பா.இரஞ்சித்தின் Neelam Productions தயாரித்துள்ள இப்படம், அபோகலிப்ஸ் பின்னணியில் உருவாகியுள்ள ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது. பல்வேறு குழுக்களுக்கிடையேயான போட்டி, மோதல்கள் மற்றும் அவற்றின் காரணமாக உருவாகும் எதிர்பாராத சம்பவங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

தனித்துவமான உலக அமைப்புடன் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’, பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் மற்றும் வலுவான ஆக்‌ஷன் களத்தைக் கொண்டிருப்பதை ‘World of Vettuvam’ வீடியோ வெளிப்படுத்துகிறது. இப்படத்தின் உலகம் மற்றும் கதைக்களத்தின் பின்னணியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில் இந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

படத்தின் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. அடிமுறை மற்றும் மால்கம் உள்ளிட்ட பாரம்பரிய தற்காப்புக் கலைகளின் அடிப்படையில் இப்படத்தின் சண்டைக் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதற்காக படத்தில் நடித்துள்ள நடிகர்கள் அனைவரும் முறையான தற்காப்புக் கலைப் பயிற்சியைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் ஆக்‌ஷன் காட்சிகளில் இயல்பான தன்மையையும், வித்தியாசமான திரை அனுபவத்தையும் உருவாக்க படக்குழு முயற்சித்துள்ளது.

ஆர்யா, தினேஷ், ஷபீர், சோபிதா துலிபாலா, கலையரசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ள இப்படம், ஆக்‌ஷன் மற்றும் கமர்ஷியல் அம்சங்களுடன் பிரம்மாண்டமான படைப்பாக உருவாகியுள்ளது.

‘வேட்டுவம்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் வெளியாகும் PAN Indian திரைப்படமாக உருவாகியுள்ளது. இதன் PAN Indian வெளியீட்டை முன்னிறுத்தும் வகையில், ‘World of Vettuvam’ வீடியோவின் இந்தி பதிப்பிற்கு நடிகர் பங்கஜ் திரிபாதியும், தெலுங்கு பதிப்பிற்கு நடிகர் ராணா டகுபதியும், மலையாள பதிப்பிற்கு நடிகர் சௌபின் ஷாஹிரும், கன்னட பதிப்பிற்கு நடிகர் கிச்சா சுதீப்பும் குரல் கொடுத்துள்ளனர். தமிழ் பதிப்பிற்கு இயக்குநர் பா.இரஞ்சித் குரல் கொடுத்துள்ளார்.

படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே, ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் தனித்துவமான உலகம் மற்றும் பா.இரஞ்சித்தின் இயக்கம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. குறிப்பாக அபோகலிப்டிக் பின்னணியில் தமிழ் சினிமாவில் உருவாகும் பிரம்மாண்டமான ஆக்‌ஷன் உலகமாக இப்படம் இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

இப்படத்தின் தொழில்நுட்பக் குழுவில் கலை இயக்குநர் S.S. மூர்த்தி, ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜி, படத்தொகுப்பாளர் செல்வா R.K., இசையமைப்பாளர் G.V. பிரகாஷ் குமார் மற்றும் ஸ்டண்ட் இயக்குநர் திலீப் சுப்பராயன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

‘World of Vettuvam’ வீடியோ மூலம் ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் பிரம்மாண்டமான உலகம் மற்றும் ஆக்‌ஷன் களத்தின் ஒரு பார்வை ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது.