தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் கௌதம் ராம் கார்த்திக், சினிமாவைத் தாண்டி விளையாட்டு மற்றும் பைக் ரைடிங்கில் கொண்டுள்ள தனது ஆர்வத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் தொடங்கியுள்ளார். குறிப்பாக, மோட்டார் சைக்கிள் ரைடிங் சமீப காலமாக அவரது வாழ்க்கையின் முக்கியமான பகுதியாக மாறியுள்ளது.
படப்பிடிப்புகளுக்கு இடையே கிடைக்கும் நேரத்தை பைக் ரைடிங்கிற்காக செலவிட்டு வரும் கௌதம், பைக் ஓட்டுவதை வெறும் பொழுதுபோக்காக மட்டும் பார்க்காமல், அதன் நுணுக்கங்களை முறையாகக் கற்றுக்கொண்டு வருகிறார். மோட்டார் சைக்கிள் பந்தயங்கள் மற்றும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் தொடர்பான விஷயங்களை தொடர்ந்து கவனித்து வரும் அவர், ஒவ்வொரு பயணத்தின் மூலமும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டு, தன்னை ஒரு ரைடராக படிப்படியாகத் தயார்படுத்தி வருகிறார்.
திரைப்படப் பணிகளின் பரபரப்பிலிருந்து சிறிது நேரம் விலகி, தனக்குப் பிடித்த பைக் ரைடிங்கில் கவனம் செலுத்துவது கௌதமுக்கு புதிய உற்சாகத்தை அளித்து வருகிறது. பைக் ரைடிங் மூலம் உடல் ரீதியாக மட்டுமல்லாமல், மனதளவிலும் தன்னை சவாலுக்கு உட்படுத்தி வரும் அவர், தனது பைக்கின் செயல்பாடுகளையும் அதன் நுணுக்கங்களையும் மேலும் புரிந்துகொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார்.
இந்த ஆர்வத்தின் ஒரு பகுதியாக, தனது நெருங்கிய நண்பர்களுடன் இணைந்து கௌதம் ராம் கார்த்திக் ஒரு சிறிய ஆவணப்பட வீடியோவை உருவாக்கியுள்ளார். இதில் அவரது மனதுக்கு நெருக்கமான பைக் ‘கோரா’ முக்கிய இடம் பிடித்துள்ளது.
கௌதம் மற்றும் அவரது நண்பர்களின் பைக் பயணம், அதற்கான தயாரிப்புகள், பயிற்சிகள் மற்றும் ரைடிங்கின் போது இடம்பெறும் பல்வேறு தருணங்களை இந்த வீடியோ பதிவு செய்கிறது. குறிப்பாக, ஒரு ரைடருக்கும் அவரது பைக்கிற்கும் இடையே உருவாகும் நெருக்கத்தையும், பைக் மீதான கௌதமின் ஆர்வத்தையும் இந்த ஆவணப்படம் வெளிப்படுத்துகிறது.
இதுவரை திரையில் நடிகராக மட்டுமே ரசிகர்களால் பார்க்கப்பட்ட கௌதம் ராம் கார்த்திக்கின் மற்றொரு பக்கத்தையும் இந்த வீடியோ அறிமுகப்படுத்துகிறது. தனது ஆர்வத்தை வெறும் பொழுதுபோக்காக வைத்துக்கொள்ளாமல், அதை முறையாகக் கற்றுக்கொண்டு அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்துடன் அவர் பயணித்து வருகிறார்.
தொடர்ந்து திரைப்படப் பணிகளில் பிஸியாக இருந்தாலும், கிடைக்கும் நேரத்தை மோட்டார் ஸ்போர்ட்ஸுக்காக ஒதுக்கி வரும் கௌதம், ஒரு ரைடராக தன்னை மேம்படுத்திக்கொள்ள தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அந்த புதிய பயணத்தின் தொடக்கத்தையும், பைக் ரைடிங்கின் மீதான அவரது ஆர்வத்தையும் பதிவு செய்யும் விதமாக தற்போது வெளியாகியுள்ள ‘கோரா’ வீடியோ அமைந்துள்ளது.
நட்பு, ஆர்வம் மற்றும் பைக் ரைடிங்கின் மீதான காதல் ஆகியவற்றுடன் கௌதம் ராம் கார்த்திக் தொடங்கியுள்ள இந்த புதிய பயணம், எதிர்காலத்தில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் துறையில் அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லுமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.