‘மிஸ்டர் பாரத்’ ரிலீஸ் தேதியில் மாற்றம் – படக்குழு வெளியிட்ட அப்டேட்!

15

லோகேஷ் கனகராஜ் வழங்கும் ‘மிஸ்டர் பாரத்’ திரைப்படத்தின் திரையரங்க வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பேஷன் ஸ்டுடியோஸ், ஜி ஸ்குவாட் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படம் நகைச்சுவை எண்டர்டெயின்மென்ட் ஜானரில் உருவாகியுள்ளது.

பாரத் மற்றும் சம்யுக்தா விஸ்வநாத் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை நிரஞ்சன் இயக்கியுள்ளார். பாலசரவணன், சுந்தர்ராஜன் மற்றும் நிதி பிரதீப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

‘மிஸ்டர் பாரத்’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அதே நாளில் பல்வேறு எதிர்பார்ப்புக்குரிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளதால், ஒவ்வொரு படத்திற்கும் உரிய திரையரங்குகளும் ரசிகர்களின் கவனமும் கிடைக்கும் வகையில், ‘மிஸ்டர் பாரத்’ படத்தின் வெளியீட்டை ஒத்திவைக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

படத்தின் புதிய திரையரங்க வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.

சிரிப்பு மற்றும் மகிழ்ச்சியை மையமாகக் கொண்ட முழுமையான எண்டர்டெயின்மென்ட் திரைப்படமாக ‘மிஸ்டர் பாரத்’ உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய வெளியீட்டு தேதியில் இப்படத்தை ரசிகர்களிடம் திரையரங்குகள் மூலம் கொண்டு சேர்க்க படக்குழு தயாராகி வருகிறது.