15 ஆண்டுகால பயணத்தை கொண்டாடிய Dr. B House of Stars Presidential Gala!

6

தோல் மருத்துவத் துறையில் டாக்டர் பைரவி செந்திலின் 15 ஆண்டுகால பயணத்தைக் கொண்டாடும் வகையில், Dr. B 360 Dermatology Experiential Centre சார்பில் முதல் முறையாக ‘Dr. B House of Stars Presidential Gala’ நிகழ்ச்சி நடைபெற்றது. செப்டம்பர் 26ஆம் தேதி கோவளம், அதுல்யா ஃபார்மில் நடைபெற்ற இந்த விழாவில் Dr. B அமைப்பின் வளர்ச்சிக்குப் பின்னால் செயல்பட்ட குழுவினரின் பங்களிப்பு மற்றும் சாதனைகள் கௌரவிக்கப்பட்டன.

Dr. B 360 Dermatology Experiential Centre, Duvee Technologies, AAVEDERM மற்றும் Bevell ஆகிய நிறுவனங்களின் குழுக்களை ஒருங்கிணைத்து நடைபெற்ற இந்த நிகழ்வு, ‘One Team, One Vision, One Glow’ என்ற கருத்தை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது.

நிகழ்வில் Dr. B 360 Dermatology Experiential Centre-ன் நிர்வாக இயக்குநரும், Duvee Technologies நிறுவனத்தின் நிறுவனருமான செந்தில், சிறப்பு விருந்தினர் சுரேஷ் சந்திரா மற்றும் தமிழ்நாடு ஆயுதப்படை ஏடிஜிபி, ஐபிஎஸ் அதிகாரி டாக்டர் ஆர். தினகரன் ஆகியோர் உரையாற்றினர்.

விழாவின் முக்கிய நிகழ்வாக ‘House of Stars Awards’ விருதுகள் வழங்கப்பட்டன. Dr. B அமைப்பின் பல்வேறு நிறுவனங்களில் சிறப்பாகப் பணியாற்றி வரும் குழு உறுப்பினர்களின் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும், AAVEDERM நிறுவனத்தின் பொது மேலாளராகப் பணியாற்றி வந்த கார்த்திகேயன், அந்நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளதாக விழாவில் அறிவிக்கப்பட்டது.

நிகழ்வில் பேசிய டாக்டர் பைரவி செந்தில், “நாட்டின் மிகப்பெரிய மற்றும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றை உருவாக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. ஆனால், அந்தக் கனவை என்னால் தனியாக அடைய முடியாது. ஒட்டுமொத்த குழுவும் என்னுடன் இணைந்து அந்தக் கனவைக் காண வேண்டும். நாம் அனைவரும் ஒன்றாகக் கனவு காணும்போதுதான் அதை நனவாக்க முடியும். நம் வெற்றியை எப்போதும் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நான் நம்புகிறேன். Dr. B-யின் வெற்றி என்பது ஒருவருடைய வெற்றி அல்ல. எங்களை நம்பி, எங்களுடன் இணைந்து பங்களித்து, எங்களுடன் வளர்ந்த ஒவ்வொருவருக்கும் சொந்தமான வெற்றி” என்றார்.

கேக் வெட்டும் நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைந்தது. Dr. B குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் ஒன்றிணைந்து 15 ஆண்டுகால பயணத்தின் வெற்றியை கொண்டாடினர்.

இந்நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்தவும், அந்த ஆண்டின் முக்கியமான சாதனைகளை கொண்டாடுவதுடன், அதன் பின்னணியில் செயல்பட்டவர்களை அங்கீகரித்து, அடுத்தகட்ட வளர்ச்சிக்கான பயணத்தை தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

டாக்டர் பைரவி செந்தில் நிறுவிய Dr. B 360 Dermatology Experiential Centre, சென்னையில் செயல்படும் ஒருங்கிணைந்த தோல் மருத்துவம், அழகியல் மற்றும் நலவாழ்வு மையமாகும். தனிப்பட்ட மருத்துவப் பராமரிப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம், மருத்துவ சிகிச்சை, வீட்டுப் பராமரிப்பு, நலவாழ்வு மற்றும் தொழில்நுட்பம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பல்வேறு சேவைகளை இம்மையம் வழங்கி வருகிறது.