ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரிப்பில், சூரி நடிப்பில் வெளியாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் திரையரங்குகளில் 25 நாட்களை நிறைவு செய்துள்ளது. தமிழகத்தில் 325 திரையரங்குகளில் தொடர்ந்து திரையிடப்பட்டு வரும் இப்படம், பல்வேறு திரையரங்குகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளுடன் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
‘மண்டாடி’ திரைப்படம் வெளியாகி 25 நாட்களை கடந்துள்ள நிலையில், ரசிகர்களின் தொடர் ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் சூரி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இப்படத்தை திரையரங்குகளில் பார்த்து தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிகர்கள் அனைவருக்கும் அவர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
மேலும், ‘மண்டாடி’ திரைப்படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்த படக்குழுவினர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சூரி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இப்படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார். சூரி கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சத்யராஜ், மகிமா நம்பியார், ரவீந்திரா, சுஹாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வெளியானது முதல் தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவைப் பெற்று வரும் ‘மண்டாடி’, தற்போது 25 நாட்களை நிறைவு செய்து தமிழகத்தில் 325 திரையரங்குகளில் தனது திரையரங்கப் பயணத்தை தொடர்ந்து வருகிறது.