வித்யா ராமராஜை பாராட்டி ஊக்கத்தொகை வழங்கிய M. செண்பகமூர்த்தி!

6

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் தடகளப் பிரிவில் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி, இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்த தடகள வீராங்கனை வித்யா ராமராஜை, Chennai District Masters Athletic Association தலைவர் மற்றும் Red Giant Movies நிறுவனத்தைச் சேர்ந்த திரு. M. செண்பகமூர்த்தி பாராட்டி கௌரவித்தார்.

2026 ஆசிய விளையாட்டுப் போட்டியில் மகளிர் 4×400 மீட்டர் ரிலேவில் தங்கப் பதக்கமும், Mixed 4×400 மீட்டர் ரிலேவில் வெள்ளிப் பதக்கமும், 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் வெண்கலப் பதக்கமும் என மொத்தம் மூன்று பதக்கங்களை வென்று வித்யா ராமராஜ் சாதனை படைத்துள்ளார்.

தனது திறமை மற்றும் விடாமுயற்சியின் மூலம் சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள வித்யா ராமராஜின் சாதனைகளைப் பாராட்டும் வகையில் M. செண்பகமூர்த்தி அவரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், வித்யா ராமராஜ் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று மேலும் பல சாதனைகளை படைக்க வேண்டும் என்ற நோக்கில் அவருக்கு ஊக்கத்தொகையும் வழங்கி பாராட்டினார். அவரது எதிர்கால விளையாட்டு பயணத்திற்குத் தேவையான ஊக்கமும் ஆதரவும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்றும் வாழ்த்தினார்.

இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக திகழும் வித்யா ராமராஜின் சாதனைகளைப் பாராட்டி, அவரை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்ட இந்த ஆதரவு, தமிழக தடகள வீரர், வீராங்கனைகளுக்கு மேலும் ஊக்கமளிக்கும் விதமாக அமைந்துள்ளது.