காதல், கட்டுப்பாடு, அதீத ஈடுபாட்டின் இருண்ட பக்கத்தைப் பேசும் ‘EYES’ – அக்டோபர் 9 முதல் Sony LIV-ல்

7

காதல் எப்போது கட்டுப்பாடாக மாறுகிறது? ஒருவரின் வாழ்க்கையைத் தொடர்ந்து கவனிப்பது எப்போது ஆபத்தான எல்லையைத் தாண்டுகிறது? காதல், அதீத ஈடுபாடு, கட்டுப்பாடு மற்றும் மன அழுத்தத்தின் இருண்ட பக்கத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள புதிய மலையாள Original தொடரான ‘EYES’, அக்டோபர் 9 முதல் Sony LIV தளத்தில் வெளியாகிறது.

“Love. Control. Obsession. Madness. அவள் வாழ்க்கையை அவன் கவனிக்கும்போது, அவனை யார் கவனிக்கிறார்கள்?” என்ற சுவாரஸ்யமான கேள்வியுடன் உருவாகியுள்ள இந்தத் தொடர், காதலுக்கும் ஆபத்துக்கும் இடையிலான எல்லை மெல்ல மெல்ல எவ்வாறு மங்குகிறது என்பதை த்ரில்லர் பாணியில் சொல்ல இருக்கிறது.

‘EYES’ தொடரின் மையக் கதாபாத்திரமான காவல்துறை அதிகாரி டினா செபாஸ்டியன் கதாபாத்திரத்தில் கனி குஸ்ருதி நடித்துள்ளார். காதல், அதீத ஈடுபாடு மற்றும் கட்டுப்பாடு எல்லை மீறும் சம்பவங்கள் தொடர்பான வழக்குகளை டினா விசாரிக்கத் தொடங்குகிறார். விசாரணை தீவிரமடையும்போது, அவர் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தனிப்பட்ட முறையிலும் பல்வேறு கேள்விகளை எழுப்பத் தொடங்குகின்றன.

வழக்கின் பின்னணியில் இருக்கும் உண்மையைத் தேடி டினா முன்னேறும்போது, பயம், பாதுகாப்பின்மை மற்றும் எதிர்பாராத திருப்பங்கள் அவரைச் சூழ்கின்றன. உண்மையை நெருங்க நெருங்க, அவர் கண்டறியும் விஷயங்கள் எதிர்பார்த்ததைவிட அதிர்ச்சிகரமானதாக மாறுகின்றன. இதன் மூலம் தனிமனித சுதந்திரம், பாதுகாப்பு மற்றும் மனநிலை மீது அதீத ஈடுபாடு ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களையும் இந்தத் தொடர் பேசுகிறது.

இந்தத் தொடரை இயக்கியுள்ள மனு அசோகன் கூறுகையில், “EYES என்பது நான் நேர்மையாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்ல விரும்பிய ஒரு கதையாகும். ஒருவரை பின்தொடர்வது என்பது வெறும் குற்றம் மட்டுமல்ல; அது ஒருவரின் பாதுகாப்பையும் மனநிலையையும் ஆழமாக பாதிக்கக்கூடியது. அந்த உண்மையை சுவாரஸ்யமான த்ரில்லர் வடிவில் சொல்ல முயற்சித்திருக்கிறோம். இந்தக் கதையை சிறப்பாக உருவாக்க உதவிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினருக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். Sony LIV பார்வையாளர்கள் இந்தத் தொடருடன் இணைவார்கள் என்றும், இந்த விஷயத்தை வேறு ஒரு கோணத்தில் பார்க்கத் தொடங்குவார்கள் என்றும் நம்புகிறேன்” என்றார்.

‘EYES’ தொடரை மனு அசோகன் இயக்கியுள்ளார். பாபி–சஞ்சய் எழுத்தில், அஞ்சனா நாயர் உருவாக்கியுள்ள இந்தத் தொடரில், ‘Uyare’ மற்றும் ‘Kaanekkaane’ படங்களுக்குப் பிறகு மனு அசோகன் – பாபி–சஞ்சய் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

DreamKatcher நிறுவனம் தயாரித்துள்ள இந்தத் தொடரில் கனி குஸ்ருதியுடன் நிகிலா விமல், தேவ் மோகன், சானியா ஐயப்பன் மற்றும் ஸ்ருதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காதல், கட்டுப்பாடு, அதீத ஈடுபாடு என நெருக்கமான உறவுகளின் மற்றொரு இருண்ட பக்கத்தை த்ரில்லர் கதைக்களத்துடன் அணுகும் ‘EYES’ தொடர், வரும் அக்டோபர் 9, வெள்ளிக்கிழமை முதல் Sony LIV-ல் வெளியாகிறது.