ஆர்மேக்ஸ் ஹார்ட்பீட்ஸ் வாராந்திர டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்த ஷாருக்கானின் ‘து மில் ஜாயே’!

6

நடிகர் ஷாருக்கான் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கிங்’ (King) திரைப்படத்தின் ‘து மில் ஜாயே’ (Tu Mil Jaaye) பாடல், ஆர்மேக்ஸ் ஹார்ட்பீட்ஸ் (Ormax Heartbeats) வெளியிட்டுள்ள வாராந்திர டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. வெளியானது முதலே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவரும் இப்பாடல், தற்போது தரவரிசையிலும் முதலிடத்தைப் பிடித்து தனது வரவேற்பை உறுதிப்படுத்தியுள்ளது.

இப்பாடலின் ஹுக் ஸ்டெப் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராமில் ஏராளமானோர் இந்த நடன அசைவுகளைப் பின்பற்றி ரீல்ஸ்களை உருவாக்கிப் பகிர்ந்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, பல்வேறு இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இப்பாடல் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது.

‘கிங்’ திரைப்படத்தில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் இணைந்து இடம்பெறும் ‘து மில் ஜாயே’ பாடல், இருவரின் திரை கெமிஸ்ட்ரி, மனதை வருடும் இசை மற்றும் கண்கவர் காட்சிகளால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இருவரும் மீண்டும் இணைந்து திரையில் தோன்றுவது அவர்களது ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆர்மேக்ஸ் ஹார்ட்பீட்ஸ் வாராந்திர பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து டிரெண்டாகி வரும் ‘து மில் ஜாயே’ பாடல், ‘கிங்’ திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. ஷாருக்கானை மீண்டும் பெரிய திரையில் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்’ திரைப்படம், வரும் டிசம்பர் 24, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.