திருமணக் கனவை நனவாக்கும் ‘கனவு வெட்டிங்’ – பிரம்மாண்ட திருமணக் கண்காட்சி டிசம்பர் 18 முதல் சென்னையில் நடைபெறுகிறது!
சொகுசுத் திருமண அனுபவங்களை வழங்கும் புதிய பிராண்டான ‘கனவு வெட்டிங்’ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ லோகோ அறிமுக விழா சென்னையில் உள்ள ஹோட்டல் அக்கார்டில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் கணேஷ் வெங்கட்ராம், பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ், டாக்டர் சாம் பால், நடிகை பவித்ரா லட்சுமி மற்றும் உபாசனா உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிறுவனத்தின் லோகோவை வெளியிட்டனர். மேலும், நடிகை பவித்ரா லட்சுமி இந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ பிராண்ட் அம்பாசிடராகவும் அறிவிக்கப்பட்டார்.
ஒவ்வொரு கொண்டாட்டமும் தனித்துவமானதாகவும், மறக்க முடியாத அனுபவமாகவும் அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் ‘கனவு வெட்டிங்’ என்ற பிராண்ட் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் MOAR Digital 360 நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான மோனிகா ரிச்சர்ட் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளார்.
விழாவில் பேசிய மோனிகா ரிச்சர்ட், “கனவு வெட்டிங் என்பது வழக்கமான திருமண ஏற்பாட்டு நிறுவனமாக மட்டும் இருக்காது. திருமணத்திற்கான ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிடுவதற்கு முன்பே, தங்களுடைய திருமணக் கனவை நேரடியாக அனுபவிக்கும் வகையில் தம்பதிகளுக்காக ஒரு முழுமையான உலகத்தை உருவாக்குவதே எங்களுடைய நோக்கம். தற்போது சென்னையில் தொடங்கியுள்ள இந்த பிராண்டின் அனுபவத்தை உலகம் முழுவதும் வாழும் இந்திய வம்சாவளியினருக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் இங்கிலாந்து, துபாய் மற்றும் மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
டிசம்பர் 18 முதல் மூன்று நாட்கள் பிரம்மாண்ட திருமணக் கண்காட்சி!
‘கனவு வெட்டிங்’ நிறுவனத்தின் முதல் பிரம்மாண்ட திருமண கான்க்ளேவ், வரும் டிசம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள RK கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவுள்ளது.
மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இந்தக் கண்காட்சியில், 30-க்கும் மேற்பட்ட பிரிவுகளைச் சேர்ந்த 150-க்கும் அதிகமான முன்னணி மற்றும் பிரீமியம் சேவை நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. திருமணத்திற்குத் தயாராகி வரும் 6,000-க்கும் மேற்பட்ட தம்பதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
திருமண ஏற்பாடுகள், அலங்காரம், உணவு, ஆடை, அழகுக்கலை உள்ளிட்ட பல்வேறு திருமணத் தேவைகளுக்கான முன்னணி சேவை நிறுவனங்களை ஒரே இடத்தில் சந்திக்கும் வாய்ப்பை இந்தக் கான்க்ளேவ் வழங்கவுள்ளது.
விழாவில் கலந்துகொண்ட பிரபலங்கள் அனைவரும் ‘கனவு வெட்டிங்’ நிறுவனத்தின் புதிய தொடக்கத்திற்கும் அதன் எதிர்காலத் திட்டங்களுக்கும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டுப் பணிகளை மேற்கொண்ட ஐரிஸ் ஈவண்ட்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் லதா ஏ. கிருஷ்ணன் இறுதியில் நன்றியுரை வழங்கினார்.
திருமணக் கொண்டாட்டங்களை வெறும் நிகழ்வாக மட்டுமின்றி, வாழ்நாள் முழுவதும் நினைவில் நிற்கும் அனுபவமாக மாற்றும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள ‘கனவு வெட்டிங்’ நிறுவனத்தின் முதல் கான்க்ளேவ், சென்னையின் திருமணத் துறையில் புதிய கவனத்தை ஈர்த்துள்ளது.



