ஃபஹத் பாசிலின் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ டீசர் வெளியீடு… ஃபேண்டஸி உலகிற்கு அழைக்கும் புதிய பயணம்!

43

இந்திய சினிமாவின் முன்னணி நடிகரான ஃபஹத் பாசில் கதாநாயகனாக நடித்துள்ள புதிய ஃபேண்டஸி என்டர்டெய்னர் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ (Don’t Trouble The Trouble) திரைப்படத்தின் டீசர் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டுள்ளது. ‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களை தயாரித்த ஆர்கா மீடியா வொர்க்ஸ் (Arka Media Works) நிறுவனமும், ஷோயிங் பிசினஸ் (Showing Business) நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அறிமுக இயக்குநர் ஷஷாங்க் யெலேட்டி இயக்கியுள்ள இப்படத்தை, ஷோயிங் பிசினஸ் நிறுவனம் சார்பில் எஸ்.எஸ். கார்த்திகேயா தயாரித்துள்ளார். மேலும், பிரபல தயாரிப்பாளர்களான ஷோபு யார்லகட்டா மற்றும் பிரசாத் தேவினேனிஇணைந்து தயாரித்துள்ளனர். கற்பனையும், நகைச்சுவையும், உணர்வுகளும் கலந்த வித்தியாசமான பொழுதுபோக்கு திரைப்படமாக இது உருவாகியுள்ளது.

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த திரைப்படத்தின் டீசர், படக்குழுவினர் பங்கேற்ற சிறப்பு விழாவில் வெளியிடப்பட்டது. டீசரின் தொடக்கத்தில், ஒரு சிறுமிக்கு ஃபஹத் பாசில் மேஜிக் செய்து காட்டும் காட்சிகள் இடம்பெறுகின்றன. இருவருக்கும் இடையேயான பாசமான தருணங்கள் டீசருக்கு அழகான தொடக்கத்தை கொடுக்கின்றன. பின்னர், அந்தச் சிறுமியை மேஜிக் மூலம் மறையச் செய்வதாக ஃபஹத் உறுதியளிக்கும் தருணத்தில் கதை எதிர்பாராத திருப்பத்தை எடுக்கிறது. அதன்பிறகு நடைபெறும் சம்பவங்களே படத்தின் மையக்கதையாக அமைந்துள்ளது.

சில நிமிடங்களே ஓடும் டீசர், வித்தியாசமான கதைக்களம், சுவாரஸ்யமான காட்சியமைப்புகள் மற்றும் மர்மம் கலந்த திரைக்கதையின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஃபஹத் பாசிலின் இயல்பான நடிப்பும், கலகலப்பான திரை இருப்பும் டீசருக்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளன. அவருடன் இடம்பெறும் சிறுமியும் தனது இயல்பான நடிப்பால் மனதில் இடம்பிடிக்கிறார்.

தொழில்நுட்ப ரீதியாகவும் டீசர் கவனம் ஈர்க்கிறது. காள பைரவாவின் பின்னணி இசை காட்சிகளின் மர்மத்தையும் சுவாரஸ்யத்தையும் மேலும் உயர்த்துகிறது. ஒளிப்பதிவின் காட்சியமைப்புகளும் படத்தின் ஃபேண்டஸி உலகத்தை அழகாக வெளிப்படுத்துகின்றன.

மொத்தத்தில், ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ டீசர், வித்தியாசமான கற்பனை உலகம், நகைச்சுவை, உணர்வுகள் மற்றும் மர்மம் கலந்த முழுமையான பொழுதுபோக்கு அனுபவத்தை வாக்குறுதி அளிக்கிறது. ஃபஹத் பாசிலை புதிய பரிமாணத்தில் பார்க்கும் வாய்ப்பை இந்த திரைப்படம் வழங்கும் என்ற எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

இந்த திரைப்படம் 2026 செப்டம்பர் 11 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் குறித்த மேலும் பல அப்டேட்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.