விஷ்ணு விஷால் நடிப்பில், செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படம், குடும்ப ரசிகர்களின் அமோக வரவேற்புடன் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வருகிறது.
வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படம், தற்போது 10 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.44.5 கோடி (Worldwide Gross) வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் வலுவான சாதனையை பதிவு செய்துள்ளது.
கிராமிய பின்னணியில் நகைச்சுவை, குடும்ப உணர்வுகள் மற்றும் ஆக்ஷன் அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம், அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்துள்ளதால், திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது.
இந்த வெற்றியை முன்னிட்டு படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டு, “Mega Family Blockbuster” என ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் வழங்கியுள்ள ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ், IVY Entertainment மற்றும் வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை Red Giant Movies கைப்பற்றி, மாநிலம் முழுவதும் வெளியிட்டுள்ளது.
விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தை செல்லா அய்யாவு எழுதி இயக்கியுள்ளார். தயாரிப்பாளர்களாக டாக்டர் ஐசரி கே. கணேஷ் மற்றும் விஷ்ணு விஷால் செயல்பட்டுள்ளனர். ஷுப்ரா, ஆர்யன் ரமேஷ், இஷான் சக்சேனா இணை தயாரிப்பாளர்களாகவும், சீதாராம் நிர்வாக தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படம், தொடர்ந்து குடும்ப ரசிகர்களின் ஆதரவுடன் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
