இயக்குநர் ஷிவானி செந்திலின் புதிய திரைப்படம் பரபரப்பான படப்பிடிப்பில்!

21

‘கார்கில்’, ‘டேக் டைவர்ஷன்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஷிவானி செந்தில், தனது ஷிவானி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் புதிய திரைப்படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து வருகிறார். இதற்கு முன்பு ஷிவானி ஸ்டுடியோஸ் மூலம் 15 திரைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்த புதிய படமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இன்னும் தலைப்பு அறிவிக்கப்படாத இந்த திரைப்படம், தற்போதைய காலகட்டத்தை பின்னணியாகக் கொண்ட முழுமையான பொழுதுபோக்கு படைப்பாக உருவாகி வருகிறது. கல்லூரி ரீயூனியனில் கலந்து கொள்ளப் பயணிக்கும் நான்கு நண்பர்களின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத சம்பவங்களும், அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதையும் மையமாகக் கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. நகைச்சுவை, காதல், நட்பு மற்றும் சுவாரஸ்யமான திருப்பங்களுடன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் படம் உருவாகி வருகிறது.

படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. தற்போது அடுத்தகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தில் எம். கார்த்திகேசன், ஜீன் வில்லியம்ஸ், சாரிஷ், ஏபல், அகன், ஆனந்த் வர்ஷன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு கோலஞ்சி குமார் ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். ஜோஸ் பிராங்க்ளின் இசையமைக்கிறார்.

இயக்குநராக தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ள ஷிவானி செந்தில், இந்த புதிய படத்தின் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் முழுமையான கமர்ஷியல் பொழுதுபோக்கு திரைப்படத்தை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இந்த திரைப்படத்தின் தலைப்பு, கதாநாயகர், கதாநாயகி மற்றும் மற்ற தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.