பார்வையற்ற இரு குழந்தைகளின் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய லெஜெண்ட் சரவணன்… மனிதநேய செயல் நெகிழ்ச்சி!
திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதிக்கு உட்பட்ட பூதூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் வடிவேல் குடும்பத்திற்கு மனிதநேயத்துடன் உதவிக்கரம் நீட்டியுள்ளார் தொழிலதிபரும் நடிகருமான லெஜெண்ட் சரவணன்.
மிகவும் பொருளாதார சிரமத்தில் வாழ்ந்து வரும் வடிவேலுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, அந்த இரு குழந்தைகளும் பார்வையற்றவர்கள். குடும்பத்தின் நிலை குறித்து தகவல் அறிந்த லெஜெண்ட் சரவணன், உடனடியாக உதவி செய்ய முன்வந்தார்.
குடும்பத்தின் அவசரத் தேவையை கருத்தில் கொண்டு, ₹50,000 நிதியுதவியையும், ஒரு மாதத்திற்குத் தேவையான மளிகைப் பொருட்களையும் வழங்கி, அவர்களுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் அளித்தார்.
சமூகத்தில் உதவி தேவைப்படும் மக்களுக்கு எந்தவித விளம்பரத்தையும் எதிர்பார்க்காமல் தொடர்ந்து ஆதரவளித்து வரும் லெஜெண்ட் சரவணனின் இந்த மனிதநேய செயல், பலரின் பாராட்டைப் பெற்று வருகிறது.
தேவைப்படும் நேரத்தில் பிறருக்கு உதவிக்கரம் நீட்டுவதே உண்மையான மனிதநேயம் என்பதை மீண்டும் ஒருமுறை தனது செயலின் மூலம் நிரூபித்துள்ள லெஜெண்ட் சரவணனின் இந்த உதவி, சமூகத்தில் பலருக்கும் முன்னுதாரணமாக அமைந்துள்ளது.