இந்தியாவின் முன்னணி மீடியா அவுட்சோர்சிங் நிறுவனமான Fourth Dimension Media Solutions நடத்தும் தென்னிந்திய மீடியா சம்மிட் (South India Media Summit – SIMS) 2026 வருகிற செப்டம்பர் 28 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இந்த ஆண்டின் மாநாட்டில் Republic Media Network நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் Editor-in-Chief அர்னாப் கோஸ்வாமி முக்கிய உரையாற்றும் (Keynote Speaker) பேச்சாளராக பங்கேற்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்னிந்தியாவின் மிக முக்கியமான மீடியா மற்றும் மார்க்கெட்டிங் துறை மாநாடுகளில் ஒன்றாக வளர்ந்துள்ள South India Media Summit, கடந்த ஏழு ஆண்டுகளாக ஊடகம், விளம்பரம், மார்க்கெட்டிங், தொழில்நுட்பம் மற்றும் வணிகத் துறைகளைச் சேர்ந்த முன்னணி தலைவர்களை ஒரே மேடையில் இணைத்து கருத்துப் பரிமாற்றத்திற்கு வழிவகுத்து வருகிறது. தற்போது தனது ஏழாவது பதிப்பை எட்டியுள்ள இந்த மாநாடு, தென்னிந்தியாவின் மிகப்பெரிய மீடியா சந்திப்பாக உருவெடுத்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெறும் ஹைதராபாத் மாநாட்டை தெலங்கானா அரசின் அமைச்சர் டாக்டர் விவேகானந்த கத்தம்மற்றும் மக்களவை உறுப்பினர் வம்சி கத்தம் ஆகியோர் தொடங்கி வைக்க உள்ளனர்.
மாநாட்டில் அர்னாப் கோஸ்வாமியுடன் இணைந்து பல்வேறு துறைகளைச் சேர்ந்த முன்னணி நிர்வாகிகள், தொழிலதிபர்கள் மற்றும் மார்க்கெட்டிங் வல்லுநர்கள் கலந்துகொள்கின்றனர். வேத அறிஞர் துஷ்யந்த் ஸ்ரீதர், Ashok Leyland, MRF, WPP Media, Havas Media Network India, Apollo International, Bisleri International, Truecaller, Quick Heal Technologies, Matrimony.com, ITC, V-Guard Industries, Roca Bathroom Products உள்ளிட்ட பல நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகள் மற்றும் பிராண்ட் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர்.
FMCG, ஆட்டோமொபைல், நிதி, சுகாதாரம், ஊடகம், தொழில்நுட்பம் மற்றும் வளர்ந்து வரும் புதிய வணிகத் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த மாநாட்டில், பிராந்திய சந்தைகளின் வளர்ச்சி, மீடியா–தொழில்நுட்ப ஒருங்கிணைப்பு, OTT தளங்கள், Connected TV, செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த மார்க்கெட்டிங், மாறிவரும் நுகர்வோர் நடத்தை உள்ளிட்ட முக்கிய தலைப்புகள் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெறவுள்ளன.
Fourth Dimension Media Solutions நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷங்கர் பி பேசுகையில், “அர்னாப் கோஸ்வாமி போன்ற செல்வாக்கு மிக்க குரலை ஹைதராபாத்திற்கு வரவேற்பது தென்னிந்திய மீடியா சம்மிட்டிற்கு ஒரு முக்கிய மைல்கல். இன்று பிராந்திய சந்தைகள் தேசிய மார்க்கெட்டிங் உத்திகளின் ஒரு பகுதியாக மட்டுமல்ல, அவற்றை தீர்மானிக்கும் மையமாக மாறியுள்ளன. தென்னிந்தியாவின் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தை இந்த மாநாடு பிரதிபலிக்கிறது” என்றார்.
Republic Media Network நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் Editor-in-Chief அர்னாப் கோஸ்வாமி கூறுகையில், “தென்னிந்தியா என்பது ஒரு சந்தை மட்டுமல்ல; இந்தியாவின் தேசிய உரையாடலை மறுவடிவமைக்கும் சக்தியாக மாறியுள்ளது. இந்த பிராந்தியத்தின் ஆற்றல், தொழில் முனைப்பு மற்றும் வளர்ச்சி அபாரமானது. South India Media Summit போன்ற தளங்கள் அந்த மாற்றங்களை நேரடியாக வெளிப்படுத்துகின்றன. ஹைதராபாத்திற்கு மீண்டும் வந்து இந்திய மீடியாவின் அடுத்த அத்தியாயத்தை உருவாக்கும் தலைவர்களுடன் உரையாட ஆவலாக இருக்கிறேன்”என்றார்.
2018-ஆம் ஆண்டு சென்னை நகரில் தொடங்கிய South India Media Summit, அதன் பின்னர் 2019 மற்றும் 2022-ல் மீண்டும் சென்னை, 2023-ல் ஹைதராபாத், 2024-ல் கொச்சி, 2025-ல் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பிராண்டிங், மீடியா புதுமைகள், டிஜிட்டல் மாற்றங்கள் மற்றும் பிராந்திய சந்தைகளின் வளர்ச்சி குறித்து முக்கிய விவாதங்களுக்கு இந்த மாநாடு வழிவகுத்து வருகிறது.
இந்த ஆண்டும் இந்திய மீடியா, விளம்பரம், டிஜிட்டல் உள்ளடக்கம் மற்றும் நுகர்வோர் தொடர்பாடலின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய கருத்துப் பரிமாற்றங்களுக்கான தளமாக South India Media Summit 2026 அமையும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.