நண்பர்கள் தினத்தில் அல்லு அர்ஜுனின் நெகிழ்ச்சியான செய்தி; “உண்மையான வெற்றி என்பது நண்பர்களையும் உங்களுடன் சேர்த்துக்கொண்டு முன்னேறுவதுதான்!”

28

நண்பர்கள் தினத்தை முன்னிட்டு நடிகர் அல்லு அர்ஜுனின் நட்பின் மதிப்பை எடுத்துரைக்கும் செய்தி ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது. திரையுலகில் வெற்றி பல உறவுகளை மாற்றிவிடும் சூழலில், தன்னுடன் பயணித்த நண்பர்களையும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும் அவரது அணுகுமுறை பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.

சமீபத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘AA23’ திரைப்படம் அறிவிக்கப்பட்டபோது, அதன் பிரம்மாண்ட அறிவிப்புடன் மற்றொரு விஷயமும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. மைத்ரி மூவி மேக்கர்ஸ்நிறுவனத்துடன் இணைந்து, அல்லு அர்ஜுனின் நீண்டநாள் நண்பர்களான பன்னி வாஸ், சந்தீப் ராமினேனி, நட்ராஜ்மற்றும் அவரது உறவினரும் சிறுவயது தோழியுமான ஸ்வாதி ஆகியோர் இணைத் தயாரிப்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த அறிவிப்பு வெறும் தயாரிப்பாளர் பட்டியலாக இல்லாமல், பல ஆண்டுகளாக தொடரும் நட்புக்கு அல்லு அர்ஜுன் அளித்த மரியாதையாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, அவரது திரைப்பயணத்தின் தொடக்க காலத்திலிருந்தே உடன் இருந்த நண்பர்களுக்கு, தனது வெற்றியின் மூலம் புதிய வாய்ப்புகளை உருவாக்கியிருப்பது ரசிகர்களிடையே பாராட்டைப் பெற்றுள்ளது.

மேலும், ‘புஷ்பா: தி ரைஸ்’ திரைப்படத்தின் தயாரிப்பிலும் அவரது தாய்வழி உறவினர்களுக்குச் சொந்தமான முத்தம்செட்டி மீடியா நிறுவனம் பங்கேற்றிருந்தது. தன்னுடன் பயணித்தவர்களை முன்னேற்றும் பண்பை அவர் தொடர்ந்து கடைப்பிடித்து வருவதாக திரையுலக வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

திரையுலகில் வெற்றி பெற்ற பிறகு பல உறவுகள் விலகிச் செல்லும் சூழலில், நண்பர்களையும் தன்னுடன் இணைத்துக் கொண்டு முன்னேறுவதே உண்மையான வெற்றி என்ற கருத்தை அல்லு அர்ஜுனின் இந்த செயல் எடுத்துக்காட்டுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கோடிக்கணக்கான ரசிகர்களால் சிறந்த நடிகராகவும் பான் இந்தியா நட்சத்திரமாகவும் கொண்டாடப்படும் அல்லு அர்ஜுன், தனது சாதனைகளுக்கு இணையாக நட்பு, நம்பிக்கை மற்றும் உறவுகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் மனிதராகவும் இந்த நண்பர்கள் தினத்தில் கவனம் ஈர்த்துள்ளார். “ஒரு திரைப்படம் சாதனைகளை உருவாக்கலாம்; ஆனால் நட்புதான் வரலாற்றை உருவாக்குகிறது” என்ற கருத்தை அவரது இந்த செயல்பாடு மீண்டும் நினைவூட்டுகிறது.