JSK Film Corporation தயாரிப்பில் உருவாகியுள்ள தமிழ் த்ரில்லர் திரைப்படம் ‘Dhik.Dhik..Dhik…’. இப்படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 2 மில்லியன் பார்வைகளை கடந்து ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. தற்போது இப்படத்தின் டீசர் பல்வேறு திரையரங்குகளிலும் திரையிடப்பட்டு வருகிறது.
டீசர் வெளியீட்டிற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான விஜய் சேதுபதி, வெங்கட் பிரபு, ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஆர்யா ஆகியோர் டீசரை வெளியிட்டு படக்குழுவினருக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதன் மூலம் ‘Dhik.Dhik..Dhik…’ படத்தின் மீதான கவனம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் மேலும் அதிகரித்துள்ளது.
தற்போது டீசர் பல்வேறு திரையரங்குகளில் பெரிய திரையில் திரையிடப்பட்டு வருகிறது. இதன் மூலம் திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் படத்தின் டீசரை பெரிய திரையில் காணும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர். டிஜிட்டல் தளத்தில் கிடைத்த வரவேற்புடன், திரையரங்குகளில் நடைபெறும் டீசர் திரையிடலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
சென்னையை பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் முழுக் கதையும் ஒரே இரவில் நடைபெறுகிறது. சஸ்பென்ஸ் மற்றும் பரபரப்புடன் நகரும் த்ரில்லர் கதைக்களத்துடன், குடும்ப உணர்வுகளையும் இன்றைய காலகட்டத்திற்கு தேவையான சமூக கருத்தையும் இப்படம் பேசுகிறது.
JSK Satish Kumar தயாரிப்பில், JSK Film Corporation சார்பில் உருவாகும் இப்படத்தின் மூலம் Srinivasan Sivajirao இயக்குநராக அறிமுகமாகிறார். இவர் Raghu Rajagopal உடன் இணைந்து படத்தின் திரைக்கதையையும் எழுதியுள்ளார்.
படத்தில் Pavel Navageethan, JSK Satish Kumar, Chandini Tamilarasan, Sandra Amy மற்றும் Bijesh Nagesh ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘Thanga Meengal’, தேசிய விருது பெற்ற ‘Kuttram Kadithal’ உள்ளிட்ட தரமான மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட திரைப்படங்களை தயாரித்துள்ள JSK Film Corporation, ‘Dhik.Dhik..Dhik…’ படத்தின் மூலமும் தனது தனித்துவமான கதைத்தேர்வை தொடர்ந்து வருகிறது.
‘Fire’ திரைப்படத்தைத் தொடர்ந்து JSK Film Corporation தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Kuttram Kadithal 2’ திரைப்படமும் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் தற்போது திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட்டு வருகிறது.
‘Dhik.Dhik..Dhik…’ படத்திற்கு Raghu Rajagopal ஒளிப்பதிவு செய்துள்ளார். DK இசையமைக்க, Prem B படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். SS Susee Devaraj கலை இயக்கத்தை கவனித்துள்ளார்.
டீசர் வெளியான 24 மணி நேரத்தில் 2 மில்லியன் பார்வைகள், முன்னணி திரையுலக பிரபலங்களின் ஆதரவு மற்றும் தற்போது திரையரங்குகளில் டீசர் திரையிடப்பட்டு வருவது என ‘Dhik.Dhik..Dhik…’ படத்தின் புரமோஷன் பயணம் சிறப்பான தொடக்கத்தைப் பெற்றுள்ளது. படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகளை JSK Film Corporation விரைவில் வெளியிட உள்ளது.