தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையான நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தின் டீசர் ‘ரைஸ் ஆஃப் மஹாசக்தி (Rise of Mahasakthi)’ எனும் பெயரில் வெளியாகியுள்ளது. இதனுடன், இப்படம் வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தில் நயன்தாராவுடன் ஊர்வசி, யோகி பாபு, துனியா விஜய், ‘மைனா’ நந்தினி, ‘கருடா’ ராம், அபிநயா, சிங்கம் புலி, வி.ஆர். சுவாமிநாதன், சுனில் வர்மா, வர்ஷினி வெங்கட், பழ.கருப்பையா, நிதின் சத்யா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மித்தலாஜிக்கல் ஃபேண்டஸி என்டர்டெய்னராக உருவாகியுள்ள இப்படத்தின் ‘ரைஸ் ஆஃப் மஹாசக்தி’ டீசர், பிரம்மாண்டமான காட்சியமைப்புகளுடன் படத்தின் உலகத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. டீசரில் இடம்பெற்றுள்ள காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை வியக்க வைக்கும் வகையில் அமைந்திருப்பதுடன், திரைப்படம் பிரம்மாண்டமான திரையரங்க அனுபவத்தை வழங்கும் என்பதையும் உணர்த்தும் வகையில் அமைந்துள்ளன.
குறிப்பாக, நயன்தாராவின் கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள காட்சிகளும், ஃபேண்டஸி அம்சங்களுடன் கூடிய பிரம்மாண்டமான காட்சியமைப்புகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளன. தீபாவளி வெளியீடாக இப்படம் திரையரங்குகளை சந்திக்கவுள்ள நிலையில், டீசருக்கான ரசிகர்களின் வரவேற்பும் டிஜிட்டல் பார்வைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஃபென்னி ஆலிவர் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். வெங்கட் ராகவன் திரைக்கதை மற்றும் வசனத்தை எழுதியுள்ளார்.
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் இப்படத்தை தயாரித்துள்ளார். குஷ்பூ சுந்தர், குஷ்மிதா கணேஷ், இஷான் சக்சேனா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்றுள்ளனர்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’, வரும் நவம்பர் 6ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய திரைப்படமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இப்படத்தின் வெளியீட்டை அறிவிக்கும் வகையில் வெளியாகியுள்ள ‘Rise of Mahasakthi’ டீசர், படத்தின் பிரம்மாண்டமான உலகத்தையும், நயன்தாராவின் கதாபாத்திரத்தையும் முன்னிறுத்தி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
