மூன்று சமையல் ஜாம்பவான்கள்… ஒரே பிரம்மாண்ட சமையலறை – ‘Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சியில் இணையும் நட்சத்திர நடுவர்கள்!

10

மையல் உலகின் சுவாரஸ்யத்தையும், பிரபலங்களின் போட்டி மனப்பான்மையையும் ஒன்றிணைக்கும் ‘Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சி விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV தளங்களில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரபல சமையல் கலைஞர்களான Chef Venkatesh Bhat, Chef Sashi Cheliah மற்றும் Chef Shreeya Adka ஆகியோர் நடுவர்களாக இடம்பெறுகின்றனர்.

சமையலறை தயாராகிவிட்ட நிலையில், ஏப்ரன்களுடன் களமிறங்கும் பிரபலங்கள் தங்களது சமையல் திறமையை வெளிப்படுத்த உள்ளனர். Sony VIZHA மற்றும் Sony LIV இணைந்து வழங்கும் இந்தப் புதிய நிகழ்ச்சி, சுவையான உணவுகளுடன் எதிர்பாராத திருப்பங்கள், சுவாரஸ்யமான சவால்கள் மற்றும் பரபரப்பான போட்டி தருணங்களையும் வழங்கவுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களில் ஒருவராக இடம்பெறும் Chef Venkatesh Bhat, சமையல் கலைஞர், உணவக உரிமையாளர், Hospitality துறை நிபுணர் மற்றும் தொலைக்காட்சி பிரபலம் என பல்வேறு தளங்களில் அறியப்பட்டவர். MasterChef Australia Season 10 வெற்றியாளரான Chef Sashi Cheliah, சர்வதேச அளவிலான சமையல் அனுபவத்துடன் நிகழ்ச்சியில் இணைகிறார். கோயம்புத்தூரில் உள்ள The French Door நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சமையல் நிபுணரான Chef Shreeya Adkaவும் நடுவர் குழுவில் இடம்பெறுகிறார்.

மூவரும் தங்களது தனித்துவமான சமையல் அனுபவம், சர்வதேச பார்வை மற்றும் உணவின் மீதான ஆர்வத்துடன் போட்டியாளர்களுக்கு சவால்களை வழங்கி, அவர்களின் சமையல் திறமையை சோதிக்க உள்ளனர்.

Banijay Asia தயாரிக்கும் ‘Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சியை Vijay தொகுத்து வழங்குகிறார். நடிகை Samantha Ruth Prabhu Celebrity Judge ஆக இடம்பெறுகிறார். தமிழ் பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியின் மூலம் சமையல் உலகில் தங்களது புதிய பயணத்தை தொடங்க உள்ளனர்.

இதுகுறித்து Chef Venkatesh Bhat கூறுகையில், இந்திய உணவு வகைகளின் தனித்துவத்தையும் வளத்தையும் உலகிற்கு அறிமுகப்படுத்திய MasterChef நிகழ்ச்சியின் பயணத்தில் தற்போது ‘Celebrity MasterChef Tamil’ மூலம் இணைவது பெருமை அளிப்பதாக தெரிவித்தார். தமிழ் உணவின் நீண்ட வரலாறு, பல்வேறு சுவைகள் மற்றும் அதன் ஆழத்தை கொண்டாடும் வகையில் இந்த நிகழ்ச்சி உருவாக இருப்பதாகவும், உணவின் சுவைகளையும் அதனுடன் இணைந்திருக்கும் கதைகளையும் உலகம் முழுவதும் கொண்டு செல்லும் வாய்ப்பாக இதை பார்க்கிறேன் என்றும் கூறினார்.

Chef Sashi Cheliah தனது பயணம் குறித்து பேசுகையில், Singapore Police Force-ல் தனது பணியை தொடங்கிய தான், ஒரு நாள் MasterChef Australia சமையலறைக்குள் நுழைந்து அந்தப் போட்டியில் வெற்றி பெறுவேன் என்று நினைத்ததே இல்லை என தெரிவித்தார். தனது குழந்தைப் பருவத்தையும் சமையல் பயணத்தையும் உருவாக்கிய இந்திய மற்றும் தென்கிழக்கு ஆசிய உணவுகளின் சுவைகள் தனது பயணத்தில் முக்கிய பங்கு வகித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஒரு போட்டியாளராக MasterChef சமையலறையின் மறுபக்கத்தில் நின்றபோது ஏற்பட்ட பதற்றம், குழப்பம் மற்றும் பிடித்த உணவை உருவாக்கும் உற்சாகம் ஆகியவற்றை தான் நன்கு அறிந்திருப்பதாகக் கூறிய Sashi Cheliah, தற்போது அதே அனுபவத்தை நடுவராக மறுபக்கத்திலிருந்து பார்க்கப் போவதாக தெரிவித்தார். Celebrity போட்டியாளர்களின் திறமையை சோதித்து, அவர்களின் எல்லைகளைத் தாண்டி முயற்சி செய்ய வைப்பதுடன், அவர்கள் கொண்டு வரும் கதைகளையும் சுவைகளையும் கண்டறிய ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார்.

Chef Shreeya Adka கூறுகையில், உணவு என்பது மக்களை ஒன்றிணைத்து உரையாடல்களையும் மறக்க முடியாத நினைவுகளையும் உருவாக்கும் சக்தி கொண்டது என்றார். MasterChef பயணத்தின் ஒரு பகுதியாக இருந்த அனுபவம், உணவு மக்களுடன் ஏற்படுத்தும் தொடர்பை தனக்கு உணர்த்தியதாகவும் தெரிவித்தார்.

தமிழ் உணவுகளின் வளமான சுவைகள், அதனுடன் இணைந்திருக்கும் கதைகள், பாரம்பரியங்கள் மற்றும் உணர்வுகளை ‘Celebrity MasterChef Tamil’ ஒன்றிணைக்கிறது என்றும், இந்தப் பயணத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைவதாகவும் Shreeya Adka கூறினார்.

மூன்று முன்னணி சமையல் நிபுணர்கள் நடுவர்களாகவும், தமிழ் பொழுதுபோக்கு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் போட்டியாளர்களாகவும் களமிறங்கும் ‘Celebrity MasterChef Tamil’, சமையல் போட்டியை மட்டுமின்றி உணவு, கலாச்சாரம் மற்றும் பிரபலங்களின் புதிய திறமைகளை இணைக்கும் நிகழ்ச்சியாக உருவாகியுள்ளது.

‘Celebrity MasterChef Tamil’ நிகழ்ச்சி விரைவில் Sony VIZHA மற்றும் Sony LIV-ல் ஒளிபரப்பாகிறது.