ஒரே சம்பவம்… பல பார்வைகள்… உண்மை எது? ‘Pooja Meri Jaan’ அக்டோபர் 2 முதல் ZEE5-ல்!

26

எல்லா கதைகளும் எளிதான பதில்களை வழங்குவதில்லை. சில கதைகள் நாம் நம்பும் விஷயங்களையும், ஒருவரைப் பற்றிய நமது பார்வையையும் கேள்விக்குள்ளாக்கும். அந்த வகையில், காதல், நிராகரிப்பு, வெறித்தனமான காதல், சம்மதம் மற்றும் சமூகத்தின் தீர்ப்புகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பும் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘Pooja Meri Jaan’.

Navjot Gulati இயக்கத்தில், Dinesh Vijan மற்றும் Amar Kaushik தயாரிப்பில் Maddock Films நிறுவனம் சார்பில் உருவாகியுள்ள இப்படம், வரும் அக்டோபர் 2-ம் தேதி Hindi ZEE5 தளத்தில் வெளியாகிறது.

Mrunal Thakur, Huma Qureshi, Vikram Singh Chauhan மற்றும் Vijay Raaz உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், Pooja என்ற பெண்ணை மையமாகக் கொண்டு நகர்கிறது. நெருங்கிய நண்பர் ஒருவர் தனது காதலை வெளிப்படுத்த, Pooja அதை நிராகரிக்கிறார். அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் நடைபெறுகின்றன.

கதை நகரும் போது, உண்மையில் என்ன நடந்தது, அதற்கு யார் பொறுப்பு, Pooja சூழ்நிலைகளின் பாதிக்கப்பட்டவரா அல்லது அவரைச் சுற்றி நிகழும் சம்பவங்களுடன் அவருக்கு வேறு வகையான தொடர்பு இருக்கிறதா என்ற பல்வேறு கேள்விகள் எழுகின்றன. இதன் மூலம், ஒரு சம்பவத்தை நாம் எவ்வாறு பார்க்கிறோம் என்பதும், அந்தப் பார்வை எவ்வாறு உண்மையை மாற்றிப் புரிந்துகொள்ளச் செய்கிறது என்பதையும் படம் ஆராய்கிறது.

படத்தில் வழக்கறிஞர் Sana கதாபாத்திரத்தில் Huma Qureshi நடித்துள்ளார். Pooja-வைச் சுற்றி நடைபெற்ற சம்பவங்களின் பின்னணியை ஆராய்ந்து, முரண்பட்ட தகவல்களுக்கு இடையே மறைந்திருக்கும் உண்மையை கண்டறிய முயலும் கதாபாத்திரமாக Sana உருவாக்கப்பட்டுள்ளது. உண்மை எட்டாக்கனியாக மாறும் சூழலில், அப்பாவித்தனம் எங்கு முடிகிறது, பொறுப்பு எங்கு தொடங்குகிறது என்ற கேள்விகளையும் இப்படம் முன்வைக்கிறது.

Mrunal Thakur, Pooja கதாபாத்திரம் குறித்து பேசுகையில், இந்தக் கதாபாத்திரம் பல்வேறு பரிமாணங்களை வெளிப்படுத்தும் வாய்ப்பை தனக்கு வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். Pooja பல அடுக்குகளைக் கொண்ட கதாபாத்திரம் என்றும், அவரைச் சுற்றி நடைபெறும் சிக்கலான சம்பவங்களே கதாபாத்திரத்தின் மீது தன்னை ஈர்த்ததாகவும் கூறியுள்ளார். மேலும், ஒருவர் அல்லது ஒரு சூழ்நிலையை நாம் எவ்வளவு வேகமாக மதிப்பிடுகிறோம் என்பதையும், நமது பார்வைகள் எவ்வாறு அந்த மதிப்பீட்டை உருவாக்குகின்றன என்பதையும் படம் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கும் என தெரிவித்துள்ளார்.

Huma Qureshi கூறுகையில், ‘Pooja Meri Jaan’ திரைப்படத்தின் தனிச்சிறப்பு அதன் மையச் சம்பவத்தை ஒரே ஒரு பார்வையில் அணுகாமல் இருப்பதுதான் என்றார். Sana கதாபாத்திரம் முரண்பட்ட தகவல்களை ஒன்றிணைத்து உண்மையை கண்டறிய முயல்வதன் மூலம் கதைக்கு சட்டரீதியான ஒரு பார்வையை கொண்டு வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும், சம்மதம், பொறுப்பு, நீதி மற்றும் சமூகத்தின் தீர்ப்புகள் குறித்து படம் அசௌகரியமான கேள்விகளை எழுப்பும் என்றும் தெரிவித்துள்ளார்.

Vikram Singh Chauhan பேசுகையில், ‘Pooja Meri Jaan’ நீண்ட நேரம் சிந்திக்க வைக்கும் கதையாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். ஒரு சூழ்நிலையையோ அல்லது அதில் சம்பந்தப்பட்ட நபர்களையோ நாம் உண்மையில் எவ்வளவு நன்றாக அறிந்திருக்கிறோம் என்ற கேள்வியை இப்படம் எழுப்புவதாகவும், உறவுகள், நிராகரிப்பு மற்றும் எல்லைகள் சோதிக்கப்படும் போது உருவாகும் உணர்வுகளை படம் ஆராய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

காதல் மற்றும் உறவுகளின் வழக்கமான கோணத்தைத் தாண்டி, நிராகரிப்பு, வெறித்தனமான காதல், சம்மதம், தனிப்பட்ட எல்லைகள் மற்றும் சமூகத்தின் தீர்ப்புகள் போன்ற சிக்கலான அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘Pooja Meri Jaan’, ஒரே சம்பவத்தை வெவ்வேறு பார்வைகளில் அணுகும் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது.

Navjot Gulati இயக்கியுள்ள இப்படத்தை Dinesh Vijan மற்றும் Amar Kaushik தயாரித்துள்ளனர். Maddock Filmsதயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் Mrunal Thakur, Huma Qureshi, Vikram Singh Chauhan மற்றும் Vijay Raaz ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

எளிதான பதில்களை வழங்காமல், பார்வையாளர்களின் சொந்த அனுமானங்களையே கேள்விக்குள்ளாக்கும் வகையில் உருவாகியுள்ள ‘Pooja Meri Jaan’, அக்டோபர் 2 முதல் Hindi ZEE5 தளத்தில் வெளியாகிறது.