சமூக அக்கறை கொண்ட கருத்தாழமிக்க பாடல்கள், வலிமையான வரிகள் மற்றும் தனித்துவமான இசைப் படைப்புகள் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றவர் சுயாதீன தமிழ் இசைக் கலைஞர் தெருக்குறள் அறிவு. தனது ஒவ்வொரு படைப்பிலும் சமூகச் சிந்தனைகளையும், வாழ்க்கையின் யதார்த்தங்களையும் இசையின் வழியாக வெளிப்படுத்தி வரும் அவர், தற்போது தனது புதிய இசை ஆல்பமான ‘ஹலோ’ (HELLO) மூலம் முற்றிலும் மாறுபட்டதொரு இசைப் பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
Bigson Records தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ரொமான்டிக் மியூசிக்கல் ஆல்பத்தில் தெருக்குறள் அறிவு மற்றும் அஸ்வதி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்பாடலை அறிவே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். காதலின் தொடக்கத்தில் ஏற்படும் உற்சாகம், எதிர்பாராத சந்திப்புகள், மெல்ல மலரும் காதல் உணர்வுகள் என மனதுக்கு நெருக்கமான தருணங்களை அழகாகப் பதிவு செய்கிறது ‘ஹலோ’.
வாழ்க்கையில் மறக்க முடியாத பல உறவுகள் ஒரு சாதாரண வணக்கத்திலிருந்தோ, எதிர்பாராத சந்திப்பிலிருந்தோ தொடங்குகின்றன. அப்படியொரு சிறிய தருணம் அழகான காதல் கதையின் தொடக்கமாக மாறுவதை மையமாகக் கொண்டு இப்பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமாகத் தனது பாடல்களில் சமூகப் பிரச்சினைகளையும் அழுத்தமான கருத்துகளையும் முன்வைக்கும் அறிவு, இந்த முறை காதலின் எளிமையான உணர்வுகளைக் கொண்டாடும் வகையில் புதிய முயற்சியில் இறங்கியுள்ளார்.
பாடல் குறித்து தெருக்குறள் அறிவு கூறுகையில், காதல் என்பது மனிதர்களை இணைக்கும் மிக அழகான உணர்வு என்றும், வாழ்க்கையின் பல்வேறு உணர்வுகளையும் அனுபவங்களையும் இசை பிரதிபலிக்க வேண்டும் என்பதே தனது நம்பிக்கை என்றும் தெரிவித்துள்ளார். தனது முந்தைய பாடல்களிலிருந்து மாறுபட்டு, அனைவருக்கும் நெருக்கமான ஓர் எளிமையான உணர்வை வெளிப்படுத்தவே ‘ஹலோ’ பாடலை உருவாக்கியதாகவும், ஒரு சிறிய வணக்கம் கூட அழகான உறவின் தொடக்கமாக மாறிவிடும் என்ற உணர்வை இப்பாடல் கொண்டாடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த இசை ஆல்பத்தில் அறிவுடன் இணைந்து அஸ்வதி நடித்துள்ளார். இருவரின் இயல்பான நடிப்பும், திரையில் வெளிப்படுத்தியுள்ள நெருக்கமான தருணங்களும் பாடலின் காதல் உணர்வுகளுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன. அருள் கூல் இப்பாடலை இயக்கியதுடன் ஒளிப்பதிவையும் மேற்கொண்டுள்ளார். அதிகப்படியான நாடகத்தன்மை இல்லாமல், இயல்பான காட்சியமைப்புகள் மூலம் காதலின் உற்சாகம், வெகுளித்தனம் மற்றும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
இசை வீடியோ உருவாக்கம் குறித்து இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளர் அருள் கூல் கூறுகையில், அறிவின் இசையமைப்பில் உருவான பாடலின் உணர்வுகளுக்கு ஏற்ற அழகான காட்சி அனுபவத்தை உருவாக்குவதே தங்களுடைய நோக்கமாக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். ஒவ்வொருவரும் காதலை வெவ்வேறு விதமாக அனுபவித்தாலும், காதலில் ஏற்படும் உற்சாகமும் மகிழ்ச்சியும் அனைவருக்கும் பொதுவானவை என்றும், அறிவும் அஸ்வதியும் தங்களது இயல்பான நடிப்பின் மூலம் பாடலின் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இப்பாடலின் இசைத் தயாரிப்புப் பணிகளை ஹாஸ்பேஸ் மேற்கொண்டுள்ளார். ஹரி, சென்னையிலுள்ள 20db Sound Studios-ல் பாடலைப் பதிவு செய்துள்ளார். பாலு தங்கச்சன் மிக்ஸிங் மற்றும் மாஸ்டரிங் பணிகளையும், ஆண்டோ ஃப்ராங்ளின் சவுண்ட் டிசைன் பணிகளையும் கவனித்துள்ளனர்.
கௌதம் கிருஷ்ணன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும், சங்கீத் கிரியேட்டிவ் டைரக்டராகவும், கல்பனா அம்பேத்கர் எக்ஸிகியூட்டிவ் புரொடியூசராகவும் பணியாற்றியுள்ளனர். விக்ரம் படத்தொகுப்பையும், கணேஷ் கலர் கிரேடிங்கையும் மேற்கொண்டுள்ளனர். பிளாய் பிளாக் நடன இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். அருண் S.K. போஸ்டர் வடிவமைப்பையும், ராஜசேகர் கோவிந்தராஜ் உதவி இயக்குநர் பணியையும் கவனித்துள்ளனர். வெற்றி மற்றும் அதுல் நிறக்கூடு உதவி ஒளிப்பதிவாளர்களாகப் பணியாற்றியுள்ளனர். சென்னையிலுள்ள 20db Studios மற்றும் வர்கலாவிலுள்ள முருகன் சலூன் ஆகியவை படப்பிடிப்பிற்கான இடவசதியை வழங்கியுள்ளன.
சமூக அக்கறை கொண்ட பாடல்கள் மூலம் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியுள்ள தெருக்குறள் அறிவு, ‘ஹலோ’ மூலம் தனது இசைப் பயணத்தில் மற்றுமொரு புதிய பரிமாணத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். காதல் உணர்வுகள், இனிமையான இசை, இயல்பான நடிப்பு மற்றும் அழகான காட்சியமைப்புகள் என ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான இசை அனுபவத்தை வழங்கும் நோக்கில் உருவாகியுள்ள இந்த ‘ஹலோ’ இசை ஆல்பம், அறிவின் கலைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க புதிய முயற்சியாக அமைந்துள்ளது.
‘ஹலோ’ – காதலின் அழகான தொடக்கத்தை இசையிலும் காட்சியிலும் கொண்டாடும் ஒரு இனிமையான இசைப் பயணம்!





