பவோலி ஆர்ட் சங்கத்தின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியப் பிரிவின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமனம்!

10

இந்தியாவின் கலை, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் முன்னெடுக்கப்படும் பவோலி ஆர்ட் சங்கத்தின் (Baoli Art Foundation) கலாச்சாரம் மற்றும் பாரம்பரியப் பிரிவின் தலைவராக அல்லு ஸ்நேகா ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் முதல் படிக்கிணறு கலைக் கண்காட்சியான (Stepwell Art Biennale) பவோலி ஆர்ட் சங்கத்தின் இந்த அறிவிப்பு, கலை மற்றும் கலாச்சாரத் தளத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

தனித்துவமான ஆடை அலங்காரத் தேர்வுகள் மற்றும் கலை, கலாச்சாரம் மீதான ஆர்வத்தால் கவனம் பெற்றுள்ள அல்லு ஸ்நேகா ரெட்டியின் இந்த நியமனம், இந்தியாவின் செழுமையான பாரம்பரியத்தைக் கொண்டாடும் பவோலி ஆர்ட் சங்கத்தின் முயற்சிக்கு புதிய பரிமாணத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க படிக்கிணறுகளை மீண்டும் மக்கள் கவனத்திற்குக் கொண்டு வருவதே பவோலி ஆர்ட் சங்கத்தின் முக்கிய நோக்கமாகும். பல நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் இந்தப் படிக்கிணறுகளின் தனித்துவமான கட்டடக்கலை நுணுக்கங்கள், அவற்றின் கலாச்சார முக்கியத்துவம் மற்றும் நீர், கலை, நாகரிகம் ஆகியவற்றுக்கு இடையேயான ஆழமான தொடர்புகளைப் புதிய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் வகையில் இம்முயற்சி முன்னெடுக்கப்படுகிறது.

இந்தக் கூட்டணியின் மூலம் இந்தியாவின் கலைப் பாரம்பரியத்தைப் பாதுகாத்துக் கொண்டாடுவதுடன், நாட்டின் கலாச்சார வேர்கள் மற்றும் தொன்மையான மரபுகள் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் பணிகளில் அல்லு ஸ்நேகா ரெட்டி முக்கியப் பங்காற்றவுள்ளார்.

பவோலி ஆர்ட் சங்கம் வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் ஜனவரி 10-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கலை, கலாச்சாரம், கட்டடக்கலை மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து, இந்தியாவின் பெருமைமிக்க வரலாற்றையும் மரபுகளையும் கொண்டாடும் தனித்துவமான கலை நிகழ்வாக இது அமையவுள்ளது.

இந்தியாவின் பாரம்பரியச் சின்னங்களை நவீன கலைப் பார்வையுடன் உலகிற்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சியில் அல்லு ஸ்நேகா ரெட்டியின் பங்களிப்பு கூடுதல் கவனம் பெற்றுள்ளது.