90களின் பள்ளிப் பருவக் காதலை நினைவுபடுத்தும் புதிய தொடர் – ‘Notebook 90s’!

5

 

90-களின் பள்ளிப் பருவக் காதல், நட்பு, வெட்கம் கலந்த பார்வைகள், சொல்லப்படாத உணர்வுகள் என அந்தக் காலத்தின் அழகான நினைவுகளை மீண்டும் கண்முன் கொண்டுவரும் வகையில் Sony VIZHA புதிய தொடரான ‘Notebook 90s – Kadhal Flashback’ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இத்தொடர் நவம்பர் 23, 2026 முதல் மாலை 7:30 மணிக்கு Sony VIZHA மற்றும் Sony LIV தளங்களில் ஒளிபரப்பாகிறது.

ஒருவரைப் பார்ப்பதற்காகவே வகுப்பறைக்குச் செல்லும் ஆவல், பள்ளியில் பரிமாறிக்கொள்ளும் ஒரு சிறிய பார்வை, நீண்ட நேரம் மனதில் நிலைத்திருக்கும் ஒரு புன்னகை என 90-களில் முதல் காதல் என்பது தனித்துவமான ஓர் அழகான அனுபவமாக இருந்தது. வெட்கம் கலந்த பார்வைகள், சொல்லத் தயங்கும் உணர்வுகள், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு என அந்தக் காலத்தின் ஒவ்வொரு சிறிய தருணமும் மனதில் பல கனவுகளை உருவாக்கின. இத்தகைய இனிமையான நினைவுகளை மீண்டும் நினைவுபடுத்துகிறது ‘Notebook 90s – Kadhal Flashback’.

1990-களின் திருச்சியைப் பின்னணியாகக் கொண்டு உருவாகியுள்ள இத்தொடரில் கௌதம் கதாபாத்திரத்தில் Muzzamil Elias, காயத்ரி கதாபாத்திரத்தில் Yuva நடித்துள்ளனர். பள்ளிப் பருவத்தில் நிகழும் ஒரு விளையாட்டுத்தனமான குறும்பில் தொடங்கும் இவர்களது நட்பு, எதிர்பாராத விதமாக முதல் காதலாக மலர்கிறது. அந்தக் காதல் தரும் மகிழ்ச்சி, மனதில் இருப்பதை வெளிப்படுத்தத் தயங்கும் தருணங்கள், காதல் கைகூடும் என்ற நம்பிக்கை, புரிதல் இல்லாத சூழல்கள், மனதை வலிக்கும் பிரிவுகள் என இளமைப் பருவக் காதலின் பல்வேறு உணர்வுகளை இத்தொடர் பேசுகிறது.

பள்ளி வழித்தடங்களில் மலர்ந்த கனவுகள், சிறிய சந்திப்புகள்கூட பல ஆண்டுகள் மறக்க முடியாத நினைவுகளாக மாறும் தருணங்கள் என 90-களின் எளிமையான வாழ்க்கை முறையையும் அதன் அழகையும் இத்தொடர் மீண்டும் நினைவுபடுத்துகிறது. மேலும், வயதான காயத்ரி கதாபாத்திரத்தில் பாவனா சிறப்புத் தோற்றத்தில் நடித்து, கடந்த காலக் காதல் நினைவுகளையும் இன்றைய வாழ்க்கையையும் இணைக்கிறார்.

இத்தொடர் குறித்து இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர் கூறுகையில், “Sony VIZHA மற்றும் Sony LIV உடன் இணைந்து ‘Notebook 90s – Kadhal Flashback’ தொடரை உருவாக்குவதன் மூலம் நம் மனதிற்கு நெருக்கமான ஒரு காலத்தை மீண்டும் நினைவுகூர விரும்பினேன். 90-களில் நட்பு, குடும்பம் மற்றும் உறவுகளுக்கு ஒரு தனி அழகு இருந்தது. அந்தக் காலத்தின் நினைவுகளை மீண்டும் கொண்டுவருவதுடன், அப்போது நம் வாழ்க்கையை அழகாக்கிய தருணங்களையும் இந்தத் தொடர் நினைவுபடுத்தும் என்று நம்புகிறேன். இந்தத் தொடரைப் பார்க்கும் ஒருவர் தனது பழைய நண்பரை நினைத்துப் பார்த்தாலோ, தன்னுடைய பழைய நினைவுகளைப் புன்னகையுடன் நினைவுகூர்ந்தாலோ அதுவே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி” என்றார்.

திரைப்பட இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹரின் படைப்பாக்கத்தில் உருவாகும் இத்தொடரை சதாசிவம் இயக்கியுள்ளார். நீலன் எழுதியுள்ளார். 90-களின் வாழ்க்கை முறை, பள்ளிப் பருவ நட்பு, முதல் காதல் மற்றும் வளரும் பருவத்தின் மறக்க முடியாத உணர்வுகளை மையமாகக் கொண்டு இத்தொடர் உருவாகியுள்ளது.

‘Notebook 90s – Kadhal Flashback’ தொடரை நவம்பர் 23, 2026 முதல் மாலை 7:30 மணிக்கு Sony VIZHA மற்றும் Sony LIV-ல் கண்டுகளிக்கலாம்.